தொடர் மழையால் பாசனத்துக்கு நீர் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் பாசனத்துக்கு நீர் நிறுத்தம்

Added : ஆக 22, 2021
Share
கோபி: தொடர் மழையால், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு நேற்று தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கடந்த ஏப்.,22ல், முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நீரை கொண்டு, இரு பாசனங்களிலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம்

கோபி: தொடர் மழையால், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு நேற்று தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கடந்த ஏப்.,22ல், முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நீரை கொண்டு, இரு பாசனங்களிலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரு பாசனங்களிலும் வினாடிக்கு, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து அடிக்கடி பெய்யும் மழையால் நேற்று காலை, 8:00 மணிக்கு இரு வாய்க்கால்களிலும் பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது. இனி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X