பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணை நீர் மட்டம் 101 அடியாக உயர்வு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர் மட்டம் நேற்று, 101 அடியாக உயர்ந்தது. பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இரண்டு லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த மாதம் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர் மட்டம் நேற்று, 101 அடியாக உயர்ந்தது. பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இரண்டு லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த மாதம் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் கடந்த ஜூலை, 25ல், 100 அடியை எட்டியது. இதையடுத்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து சீராக உள்ளதால், அணை நீர்மட்டம் குறையாமல், 100 அடியில் நீடித்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று நீர்மட்டம், 101 அடியை எட்டியது. நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 101.14 அடியாகவும், நீர் இருப்பு, 29.6 டி.எம்.சி., ஆகவும் இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 632 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து காளிங்கராயன் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில், 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X