பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டான அரசு ஊழியர் சங்கம்; ஆர்ப்பாட்டத்தால் பதட்டம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், ஒரு தரப்பு அரசு ஊழியர் சங்கம் நடத்திய நிருபர்கள் கூட்டத்துக்கு இடையே வந்த, மற்றொரு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில தலைவர் அன்பரசன் தலைமையிலும், மற்றொரு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமையிலும் செயல்படுகிறது. தமிழ்செல்வி தலைமையிலான சங்க மாநில

ஈரோடு: ஈரோட்டில், ஒரு தரப்பு அரசு ஊழியர் சங்கம் நடத்திய நிருபர்கள் கூட்டத்துக்கு இடையே வந்த, மற்றொரு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில தலைவர் அன்பரசன் தலைமையிலும், மற்றொரு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமையிலும் செயல்படுகிறது. தமிழ்செல்வி தலைமையிலான சங்க மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் நேற்று மாலை ஈரோடு ஓட்டலில் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க கோரினோம். ஆனால், நிதிச்சுமையால் இந்தாண்டு இல்லை என்று நிதியமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே, சரண்டர் தொகை வழங்க இயலாது என அறிவித்து இழப்பை சந்தித்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இது பெரிய இழப்பாகும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 31ல் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்வது, செப்., 9 ல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்போது அங்கு வந்த வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் தலைமையிலான போலீசார், 'இங்கு கூட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை. உடன் கூட்டத்தை முடித்து கொண்டு வெளியேறுங்கள்' என்றார். அதற்குள் மற்றொரு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், மாநில துணை தலைவர் சீனிவாசன் தலைமையில் வந்த, 50 பேர் அறை வாயிலில் நின்று, கோஷம் எழுப்பி அறைக்குள் செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அறைக்குள் இருந்த தமிழ்செல்வி தலைமையிலானவர்களை வெளியேற்றி, காரில் அனுப்பி வைத்தனர். இதுபற்றி, சீனிவாசன் கூறுகையில்,'' சில அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்கும் போலி சங்கத்தினர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடி, லோகோ, பெயரை பயன்படுத்தக்கூடாது. சங்க பெயரை பயன்படுத்தியதால், அவர்களை கைது செய்ய வேண்டும்,'' என்றார். இச்சம்பவத்தால், 45 நிமிடங்களுக்கு மேல் பதட்டமான சூழல் நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X