சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரூர் அருகே தடுப்பூசி மையத்தில் இருதரப்பினர் திடீர் வாக்குவாதம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே கொரோனா தடுப்பூசி மையத்தில் டோக்கனுடன் வந்தவர்களுக்கும், வரிசையில் நின்றவர்களுக்கும், வாக்குவாதம் ஏற் பட்டது.கரூர் மாவட்டத்தில் நேற்று, 16 மையங்களில், 6,400 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டு மையங்களில், 600 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரூர் அருகே கொளந்தானூரில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில், 400

கரூர்: கரூர் அருகே கொரோனா தடுப்பூசி மையத்தில் டோக்கனுடன் வந்தவர்களுக்கும், வரிசையில் நின்றவர்களுக்கும், வாக்குவாதம் ஏற் பட்டது.


கரூர் மாவட்டத்தில் நேற்று, 16 மையங்களில், 6,400 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டு மையங்களில், 600 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரூர் அருகே கொளந்தானூரில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில், 400 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பலர் வரிசையில் காத்திருந்தனர். அப்போது, சிலர் டோக்கனுடன் தடுப்பூசி செலுத்த சென்றனர். இதனால் வரிசையில் நின்றவர்களுக்கும், டோக்கனுடன் வந்தவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. 'வரிசையில் நின்றால் மட்டும் தடுப்பூசி செலுத்தப்படும். டோக்கன் யாருக்கும் வழங்கப்படவில்லை' என, போலீசார், மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், டோக்கனுடன் வந்தவர்களும் வரிசையில் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X