சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி மாணவர்கள் பலி; தந்தை, மகன் கைது

Added : ஆக 22, 2021
Share
Advertisement
நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே, மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் இறந்த வழக்கில், தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே சொத்தமலையில் ஒன்பதாவது படித்த ஹரி, 14, பழையபேட்டையை சேர்ந்த எட்டாவது படித்த தனுஷ்ராஜ், 13. இருவரும் செட்டேரி டேம் அருகே உள்ள குட்டையில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு குளிக்க இறங்கினர். அப்போது மின்சாரம்

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே, மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் இறந்த வழக்கில், தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.


திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே சொத்தமலையில் ஒன்பதாவது படித்த ஹரி, 14, பழையபேட்டையை சேர்ந்த எட்டாவது படித்த தனுஷ்ராஜ், 13. இருவரும் செட்டேரி டேம் அருகே உள்ள குட்டையில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு குளிக்க இறங்கினர். அப்போது மின்சாரம் பாய்ந்து இருவரும் இறந்தனர். இரவு, 11:30 மணிக்கு அவர்கள் உடல்களை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குனிச்சியூரை சேர்ந்த பார்த்திபன், குட்டை அமைத்து முறைகேடாக செயற்கை மணல் தயாரித்து வந்துள்ளார். இதற்காக மின் கம்பத்தில், கொக்கி போட்டு திருட்டுத்தனமாக மின்சாரத்தை திருடி வந்துள்ளார். மின் கம்பி அறுந்து குட்டைக்குள் விழுந்தது. இதனால் குட்டை தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. இது தெரியாமல் சிறுவர்கள் குளிக்க இறங்கிய போது, மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு மருத்துவமனையை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நாட்றம்பள்ளி போலீசார் பார்த்திபன், 45, அவர் மகன் பிரபு, 20, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X