சொல்கிறார்கள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

Added : ஆக 22, 2021
Share
சித்தாவில் இருக்குது தீர்வு! கொரோனா போன்ற வைரஸ் நோய் தொற்றை குணப்படுத்த, சித்த மருத்துவத்தில் பல விதமான தாது பொருட்கள் உள்ளன. முறையான மருத்துவரை அணுகி, அவர் குறிப்பிடும் அளவில், நேரத்தில் பக்குவமாக சாப்பிட, கொரோனா நோய் தொற்று மற்றும் அதன் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம் என கூறுகிறார், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு:
 சொல்கிறார்கள்

சித்தாவில் இருக்குது தீர்வு!
கொரோனா போன்ற வைரஸ் நோய் தொற்றை குணப்படுத்த, சித்த மருத்துவத்தில் பல விதமான தாது பொருட்கள் உள்ளன. முறையான மருத்துவரை அணுகி, அவர் குறிப்பிடும் அளவில், நேரத்தில் பக்குவமாக சாப்பிட, கொரோனா நோய் தொற்று மற்றும் அதன் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம் என கூறுகிறார், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு:

கொரோனா பாதிப்புகளை அதிகரிக்க விடாமல் மட்டுப்படுத்த ஏராளமான சித்த மருந்துகள் உள்ளன. மூலிகைகள் பல சேர்த்து தயாரிக்கப்படும் கபசுர குடிநீரை போலவே, பல மருந்துகள் உள்ளன.கோரோசனை எனப்படும், பசு மாட்டின் பித்தப் பையிலிருந்து எடுக்கப்படும் ஒரு மருந்துப் பொருள் 50 ஆண்டுகளுக்கு முன், குழந்தை மருத்துவத்திலும், சளித் தொந்தரவுக்கும் மிகச் சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டது. அதை, சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி எடுத்துக் கொள்ளலாம்.
அதுபோல, தாளிசாதி சூரணம் 2 - 3 கிராம், சிவனார் அமிர்தம் 500 மி.கி., ஆறுமுக செந்துாரம் 200 மி.கி., காளமேக செந்துாரம் 200 மி.கி., முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., ஆகிய மருந்து கலவையை உணவுக்குப் பின், 50 மி.லி., பாலில் கலந்து மூன்று வேளையும் 3 - 5 நாட்கள் பருகி வரலாம். இதில் தாளிசாதி சூரணம் என்பது 40 மூலிகை பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் பொடி. இது, சளிக்கு முதன்மையான மருந்தாக உள்ளது. அதுபோல, சிவனார் அமிர்தம் என்பது தலைவலி, மூக்கடைப்பு, தும்மல், லேசான காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து.

ஆறுமுக செந்துாரம் என்பது எல்லா உடல் வலிகளையும் குணப்படுத்தும் மருந்து. காளமேக செந்துாரம் என்பது, மழை மேகம் போல சளி கொட்டினாலும் அதை குணப்படுத்தும் குணம் கொண்டது.இதில், தாளகம் மற்றும் இலிங்கம் போன்ற பற்பங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும், முத்துச்சிப்பி பற்பம், நுரையீரலில் சேர்ந்திருக்கும் சளியை குணப்படுத்த வல்லது. கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் மூச்சு விட சிரமம் இருக்கும் போது, ஆடாதோடை, துாதுவளை, கண்டங்கத்தரி, இண்டு, இசங்கிலைச்சாறு போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப் படும் வாசாதி லேகியத்தை எடுத்துக் கொண்டால் குணம் கிடைக்கும்.

இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, உணவு முறையில் கவனம் தேவை. கொரோனா தொற்று அறிமுகமான முதல் நாளில் அன்னப்பால் கஞ்சி மட்டுமே அருந்த வேண்டும். இரண்டாம் நாள் மிளகு ரசம் கலந்த சாதம், மூன்றாம் நாள் சிறுபருப்பு சாம்பார் சாதம் சாப்பிடலாம்.இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகும் உணவுகளை சாப்பிட வேண்டும். எலுமிச்சம் பழச்சாறு, நெல்லிக்காய்ச் சாறு போன்ற புளிப்பான பழச்சாறுகளை அருந்தக் கூடாது!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X