பொது செய்தி

தமிழ்நாடு

விரைவில் புதிய வீட்டுவசதி கொள்கை: பழைய நடைமுறைகளுக்கு 'குட்பை'

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:ஊரக மற்றும் நகர்ப்புற மக்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில், புதிய வீட்டுவசதி கொள்கை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கொள்கை தயாரிப்பதில், பழைய நடைமுறைகளையும் மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.நாட்டு மக்களின் வீட்டுவசதி தேவையை பூர்த்தி செய்வதற்காக, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டங்களின் பயன், மக்களை
 விரைவில், புதிய வீட்டுவசதி ,கொள்கை ,பழைய நடைமுறைகளுக்கு, 'குட்பை'

சென்னை:ஊரக மற்றும் நகர்ப்புற மக்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில், புதிய வீட்டுவசதி கொள்கை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
கொள்கை தயாரிப்பதில், பழைய நடைமுறைகளையும் மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.நாட்டு மக்களின் வீட்டுவசதி தேவையை பூர்த்தி செய்வதற்காக, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டங்களின் பயன், மக்களை முழுமையாக சென்றடைகிறதா என்பதை ஆராய்வது அவசியம்.

தமிழகத்தில் நகர்ப்புற வீட்டுவசதி திட்டங்களுக்கு, உலக வங்கி கடனுதவி அளித்துள்ளது. இதற்காக கள ஆய்வு முடிந்து, அரசுக்கு சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அந்த பரிந்துரைகள் அடிப்படையில், முந்தையஅரசு, புதிய வீட்டுவசதிகொள்கையை அறிவித்தது. ஆனால், இந்த கொள்கை, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படாமல் தயாரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.புதிய வீட்டுவசதி கொள்கை, இதுவரை மக்களின் பார்வைக்கும் வரவில்லை. அதனால், புதிதாக வந்துள்ள அரசு, இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த துவங்கி உள்ளது.

மாநில வளர்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல் அடிப்படையில், புதிய வீட்டுவசதி கொள்கை உருவாக்க, ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் சமீபத்தில் நடந்தது.

இது குறித்து, வீட்டுவசதி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த குழுவில், சர்வதேச அளவில் வீட்டுவசதி தொடர்பான விவகாரங்களில், சிறப்பாக செயல்படும் அமைப்புகளின் பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.நகர்ப்புறம், ஊரகப்பகுதி மக்களின் வீட்டுவசதி தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில், புதிய கொள்கை தயாரிக்கப்படுகிறது.

இதில், சொந்த வீடு மட்டுமின்றி, வாடகை குடியிருப்புகள் அதிகரிப்பதற்கும்; குறைந்த செலவில் வீடுகள் கட்டுவதற்கான வழிமுறைகளும் இடம் பெறும்.பழைய நடைமுறைகளை மாற்றி, தற்போதையசூழலுக்கு ஏற்றபடி சட்டங்களை எளிமைப்படுத்தவும், விதிகளை மேம்படுத்தவும், இதில் வகை செய்யப்படும். அடுத்த சில மாதங்களில், இக்கொள்கை முறையாக அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஆக-202116:29:44 IST Report Abuse
kalanithi cell no 9482789839 namaskaram.request to remodule old housing unit in Coimbatore, peelamedu opp.to krishnammak college nearly 600 flars. now in bad condition n fallen some flats. my cell no 9482789839. constructed by tamiknadu housing board.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
23-ஆக-202108:39:09 IST Report Abuse
RajanRajan முதலில் இந்த கொள்கையை லஞ்ச ஊழல் இல்லாம எங்கே அமல் படுத்தி காட்டுங்க திராவிட தொண்டைமான்களே. இங்கே சட்டம் போடுதல் அறிதல்ல அதை அமல் படுத்தும் போது இருக்கிற கும்மியடிப்பும் குத்தாட்டமும் தான் தாங்க முடியாது. எந்த சேவைக்கு என்று அரசு அலுவலக படி ஏறினாலும் மக்களை திவாலாக்கி தான் அனுப்புவானுங்க அப்படி ஒரு செட்டப்பிலே இந்த அரசு ஓடுது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
23-ஆக-202108:35:36 IST Report Abuse
RajanRajan முதலில் இந்த கொள்கையை லஞ்ச ஊழல் இல்லாம எங்கே அமல் படுத்தி காட்டுங்க திராவிட தொண்டைமான்களே. இங்கே சட்டம் போடுதல் அறிதல்ல அதை அமல் படுத்தும் போது இருக்கிற கும்மியடிப்பும் குத்தாட்டமும் தான் தாங்க முடியாது. எந்த சேவைக்கு என்று அரசு அலுவலக படி ஏறினாலும் மக்களை திவாலாகி தான் அனுப்புவானுங்க அப்படி ஒரு செட்டப்பிலே இந்த அரசு ஓடுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X