குடியுரிமை திருத்தச் சட்டம் ஏன்? தேவையை உணர்த்திய அமைச்சர்!

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை வைத்து குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அவசியத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சுட்டிக்காட்டி உள்ளார்.வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையின மக்களாக வசிக்கும் ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு, நம் நாட்டில் குடியுரிமை வழங்க மத்திய பா.ஜ., அரசு முடிவு செய்தது.
குடியுரிமை, திருத்த சட்டம் ,ஏன்? தேவையை ,உணர்த்திய, அமைச்சர்!

புதுடில்லி:ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை வைத்து குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அவசியத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சுட்டிக்காட்டி உள்ளார்.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையின மக்களாக வசிக்கும் ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு, நம் நாட்டில் குடியுரிமை வழங்க மத்திய பா.ஜ., அரசு முடிவு செய்தது. இதற்காக, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து 2019ம் ஆண்டு பார்லி.,யில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளதை அடுத்து, அங்கு சிக்கித் தவிக்கும் மக்களை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கிருந்து நுாற்றுக்கணக்கான ஹிந்துக்களும், சீக்கியர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதை வைத்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான ஹர்தீப் சிங் பூரி, குடியுரிமை திருத்த சட்டத்தின் அவசியத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.அவர் கூறியுள்ளதாவது:ஆப்கானிஸ்தானில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகளால் அங்குள்ள சீக்கிய மற்றும் ஹிந்துமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே, நாம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றினோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
23-ஆக-202116:46:12 IST Report Abuse
sankaseshan Appusami all ministers should have knowledge and interests in other ministery also. The8 is nothing wrong in it. Minister regarly speak about his ministry in parliament.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
23-ஆக-202108:27:41 IST Report Abuse
RajanRajan விரைந்து இந்த குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு அமல் படுத்தி இந்திய தேசத்தை மக்களை அந்நிய கைக்கூலிகளாக செயல்படும் உள்ளூர் தாலிபான்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்.
Rate this:
Cancel
23-ஆக-202105:09:20 IST Report Abuse
அப்புசாமி இவுரு பெட்ரோலியத் துறை அமைச்சர். பெட்ரோல், டீசல் , கச்சா எண்ணெய் விலை உயர்வு விவகாரம் தவிர்த்து பாக்கி எல்லாத்தப் பத்தியும் பேசுவாரு.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
23-ஆக-202107:55:21 IST Report Abuse
NicoleThomsonஆமா தமிழகத்தில் இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் அந்த துறைக்கு மாத்திரம் படித்து விட்டு வந்திருப்பார்கள் போல? அணில் மூலம் கரண்ட் கட்டு ஆகும் துரையின் அமைச்சர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X