ஆப்கனிலிருந்து ஒரே நாளில் 329 இந்தியர்கள்... மீட்பு!:எஞ்சியவர்களையும் அழைத்து வர அரசு தீவிரம்

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்த 329 இந்தியர்கள் உட்பட 400 பேர், மூன்று விமானங்களில் நேற்று பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். விமானப் படை துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்டுள்ளது. இதில் இரண்டு ஆப்கானிஸ்தான் எம்.பி.,க்களும் அடங்குவர்.தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்ததை அடுத்து, அங்கு பதற்றம் நிலவுகிறது. உயிருக்கு
ஆப்கன், ஒரே நாளில், 329 இந்தியர்கள், மீட்பு

புதுடில்லி:தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்த 329 இந்தியர்கள் உட்பட 400 பேர், மூன்று விமானங்களில் நேற்று பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். விமானப் படை துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்டுள்ளது. இதில் இரண்டு ஆப்கானிஸ்தான் எம்.பி.,க்களும் அடங்குவர்.

தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்ததை அடுத்து, அங்கு பதற்றம் நிலவுகிறது. உயிருக்கு அஞ்சி மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதையடுத்து அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


பல தலைமுறை

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துாதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உட்பட 200 பேர், நம் விமானப் படை விமானங்கள் மூலம் ஏற்கனவே மீட்கப்பட்டு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 329 இந்தியர்கள் உட்பட 400 பேர், மூன்று விமானங்களில் அழைத்து வரப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து, சி - 17 இந்திய விமானப் படையின் சரக்கு போக்குவரத்து விமானம் மூலம் 168 பேரை நம் விமானப் படை நேற்று காலையில் அழைத்து வந்தது. உ.பி., மாநிலம் காசியாபாதில் உள்ள ஹிண்டான் விமானப் படை தளத்தில் விமானம் தரையிறங்கியது. இதில் 107 இந்தியர்கள் அடங்குவர். இவர்களில் இந்தியாவை பூர்வீகமாக உடைய, ஆப்கனில் பல தலைமுறையாக வசித்து வந்த சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் 23 பேரும் இடம் பெற்றிருந்தனர்.


தீவிர முயற்சி

மேலும், காபூலில் இருந்து 87 இந்தியர்கள் மற்றும் இரண்டு நேபாளியர், தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர். அவர்களையும் நம் விமானப் படை நேற்று அழைத்து வந்தது.அதைத் தொடர்ந்து காபூலில் இருந்து கத்தாரின் தோஹா நகருக்கு சில நாட்களுக்கு முன் அழைத்து செல்லப்பட்ட 135 இந்தியர்கள் நேற்று டில்லி வந்து சேர்ந்தனர்.

அமெரிக்கா, கத்தார், தஜிகிஸ்தான் மற்றும் மற்ற நட்பு நாடுகளின் உதவியுடன் இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுஉள்ளனர்.டில்லிக்கு நேற்று முதலில் வந்த விமானத்தில் மீட்கப்பட்ட 168 பேரில், ஆப்கன் எம்.பி.,க்கள் இரண்டு பேரும் அடங்குவர். நரேந்திர சிங் கல்சா, அனார்கலி ஹோனர்யார் என்ற இந்த எம்.பி.,க்கள் இந்தியாவை பூர்வீகமாக உடையவர்கள். அவர்கள் குடும்பத்தாரும் பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மற்ற இந்தியர்களையும் அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருவதாக, நம் வெளியுறவுத் துறை தெரிவித்துஉள்ளது.


போலியோ தடுப்பூசி

உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தான் போலியோ பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு வரவழைக்கப்பட்ட அனைவருக்கும் விமான நிலையத்திலேயே போலியோ தடுப்பூசி வழங்கப்பட்டது. ''அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும்,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார்.


'20 ஆண்டு உழைப்பு வீணானது'

ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு, நேற்று அழைத்து வரப்பட்டவர்களில் இரண்டு எம்.பி.,க்களும் அடங்குவர். சீக்கியரான நரேந்திர சிங் கல்சா கூறியுள்ளதாவது:கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளும் வீணாகியுள்ளன. அங்கு தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்தியா எங்கள் இரண்டாவது தாய் வீடு.

நாங்கள் ஆப்கானிஸ்தானில் வசித்தபோதும், இந்தியராகவே பார்க்கப்பட்டோம். ஆப்கனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இன்று என் குடும்பம் உயிரோடு இருப்பதற்கு இந்திய அரசே காரணமாகும்.ஹிந்து மற்றும் சீக்கியர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என, தலிபான்கள் கூறியுள்ளனர். தலிபான்களில் பல பிரிவுகள் உள்ளன. அவர்களை நம்ப முடியாது. அதனால், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து ஹிந்து மற்றும் சீக்கியர்களையும் உடனடியாக மீட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆப்கனிலிருந்து வந்த மற்றொரு பெண் கூறியதாவது:தலிபான் பயங்கரவாதிகள் என் வீட்டை எரித்து விட்டனர். என் மகள் மற்றும் இரண்டு பேரக் குழந்தைகளுடன் தப்பி வந்து விட்டோம். நரகத்தின் மறு வடிவமாக ஆப்கன் உள்ளது. எங்களை மீட்ட, பிரதமர் மோடிக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-ஆக-202110:49:48 IST Report Abuse
Kasimani Baskaran முல்லாக்களிடம் சிக்கினால் எந்த நாடும் நாசமாகும். ஆண்டவன் இவர்களுக்கு எல்லாம் கொடுத்துவிட்டு பகுத்தறிவை மட்டும் கொடுக்கவில்லை. நம்மூர் தீவெட்டிக்கோஷ்டியை அங்கு அனுப்பி பகுத்தறிவை விற்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X