சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பின்னோக்கி எடுத்த போது காருடன் கிணற்றில் விழுந்து ஐ.டி., ஊழியர் பலி

Added : ஆக 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஆற்காடு:ஆற்காடு அருகே, பின்னோக்கி எடுத்த போது, காருடன் கிணற்றில் விழுந்த ஐ.டி., ஊழியர் பலியானார்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர் கோபி, 40. இவர் சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றினார். விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தார். இவருக்கு சொந்தமான நிலம், ஆற்காடு அருகே விளாப்பாக்கத்தில் உள்ளது.இன்று மதியம் 3:30 மணிக்கு கார்ப்பியோ காரில், கோபியும், அவர் மனைவி
 பின்னோக்கி எடுத்த போது காருடன் கிணற்றில் விழுந்து ஐ.டி., ஊழியர் பலி

ஆற்காடு:ஆற்காடு அருகே, பின்னோக்கி எடுத்த போது, காருடன் கிணற்றில் விழுந்த ஐ.டி., ஊழியர் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர் கோபி, 40. இவர் சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றினார். விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தார். இவருக்கு சொந்தமான நிலம், ஆற்காடு அருகே விளாப்பாக்கத்தில் உள்ளது.

இன்று மதியம் 3:30 மணிக்கு கார்ப்பியோ காரில், கோபியும், அவர் மனைவி மஞ்சுளா, 34, நண்பர் தினேஷ், 33, மற்றும் இரண்டு குழந்தைகளோடு சென்றனர்.காரை கோபி ஓட்டிச் சென்றார். நிலத்தில் மனைவி, குழந்தைகளை இறக்கி விட்டு விட்டு, காரை ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்த பின்னோக்கி எடுத்தார். காரில் தினேஷ் இருந்தார். அப்போது வேகமாக பின்னோக்கி சென்ற கார் அருகில் இருந்த 150 ஆடி ஆழ தரை கிணற்றில் விழுந்தது.இதில் நீரில் மூழ்கி கோபி இறந்தார். ஆற்காடு தீயணைக்கும் துறையினர் கயிறு கட்டி கோபியின் உடலை மாலை 6:00 மணிக்கு மீட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 8:00 மணிக்கு காரில் சிக்கிய தினேசை மீட்டனர்.கிணற்றில் விழுந்த காரை எடுக்க முடியவில்லை. திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து தன் விவசாய நிலத்தை பார்க்க சென்ற போது அவரது கிணற்றில் விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
24-ஆக-202110:29:46 IST Report Abuse
Muthu Kumarasamy வாகனத்தை பின்னோக்கி எடுக்கும் பொது மிகவும் கவனம் தேவை. இதை மாதிரியான பக்கிதியில் பின்னோக்கி எடுப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி எடுக்க நேர்ந்தால், பின்னால் ஒருவரை நிற்கவைத்து வண்டியை மிகவும் மெதுவாக எடுக்க வேண்டும். அக்ஸிலரேட்டரில் காலை வைக்க கூடாது. கிளட்ச் மற்றும் பிரேக் உதவியுடன் வேண்டிய நிறுத்தி நிறுத்தி மெதுவாக நகர்த்த வேண்டும். நம் நாட்டில் வேண்டி ஓட்டுவதில் போதிய பயிற்சி இல்லை. நான்கு வழி சாலையில் எப்படி ஓட்ட வேண்டும் என்று பலருக்கு தெரிவதில்லை.
Rate this:
KayD - Mississauga,கனடா
25-ஆக-202119:40:54 IST Report Abuse
KayDகரெக்ட் ஆ சொன்னீங்க .பட் ஒரு பயல் கேக்க மாட்டான் . வண்டி driver seat ல உட்கார்ந்தவுடன் ஏதோ ராக்கெட் போடறேன் னு நினைப்பு வரும். யாருக்கு எப்ப என்ன நடக்கும் னு தெரியாது. கவனம் 100% தேவை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X