அரங்கங்கள் இயங்க அனுமதி தேவை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரங்கங்கள் இயங்க அனுமதி தேவை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

Added : ஆக 22, 2021
Share
கோவை:மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற்றால் மட்டுமே, மிகப்பிரம்மாண்டமான விழா அரங்கங்கள், தொடர்ந்து இயங்க முடியும் என்று, மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.கொரோனா தாக்கம் இனியும் முற்றிலுமாக முடிவுக்கு வரவில்லை. கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கவில்லை என்ற போதிலும், அரசு கட்டுப்பாடுகளை சில துறைகளுக்கு தளர்த்தியுள்ளது. இன்னும் சில

கோவை:மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற்றால் மட்டுமே, மிகப்பிரம்மாண்டமான விழா அரங்கங்கள், தொடர்ந்து இயங்க முடியும் என்று, மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.கொரோனா தாக்கம் இனியும் முற்றிலுமாக முடிவுக்கு வரவில்லை. கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கவில்லை என்ற போதிலும், அரசு கட்டுப்பாடுகளை சில துறைகளுக்கு தளர்த்தியுள்ளது.

இன்னும் சில துறைகளுக்கு கட்டுப்பாடு நீடிக்கிறது.திருமண மண்டபங்கள் மற்றும் மிகப்பெரிய ஓட்டல்கள் தவிர, 5,000 சதுர அடிக்கு மேல் உள்ள விழா அரங்கங்கள், கோழி, முயல் வளர்ப்பு பண்ணைகள், 20,000 சதுர மீட்டருக்கு மேற்பட்ட கட்டுமானத்திட்டங்கள், அன்றாடம் 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட கழிவுநீரை அகற்றும் கட்டமைப்பு உள்ளிட்டவையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் முன் அனுமதி பெற்றுதான், இயங்க வேண்டும்.1974 மற்றும் 1981ம் ஆண்டு, தண்ணீர் மற்றும் காற்று மாசுக்கட்டுப்பாடு வாரிய சட்டங்களின் அடிப்படையில், இந்நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இது குறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கொரோனாவின் தாக்கம், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் இல்லை. இருந்தாலும், கொரோனா நோய் தாக்கம் கட்டுக்குள் இருக்க வேண்டும்; எல்லை மீறி போய்விடக்கூடாது என்பதில், தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.அதனால் அனைத்துத்துறை அரசு அதிகாரிகளுக்கும், அரசுத்துறை செயலர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
அதன்படி, தமிழக அரசு ஊரடங்கு விதிகளில் தளர்வு வழங்கினாலும், துறை சார்ந்த அனுமதி பெற்ற பின்பு தான், செயல்பட அனுமதிக்க வேண்டும்.அதோடு, அதிகாரிகள் எப்போதும் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். எந்த சூழலிலும் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடாது. மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்பதில், அதிகாரிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அரசு எச்சரித்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X