பொது செய்தி

தமிழ்நாடு

ஹைய்யா இனிமேல் ஜாலி: உயிரியல் பூங்கா திறந்தாச்சு!

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோவை:பல மாதங்களாக மூடப்பட்டு இருந்த, மாநகராட்சி உயிரியல் பூங்கா, மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோவை வ.உ.சி., பூங்கா அருகில் மநாகராட்சி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பெலிக்கான், நீர் காகம் உள்ளிட்ட பறவைகள், பல வகையான பாம்புகள் என, 538 உயிரினங்கள் உள்ளன.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020ம் ஆண்டு மார்ச், 23ம் தேதி முதல் உயிரியல் பூங்கா மூடப்பட்டது. அதன் பிறகு பலமுறை
ஹைய்யா இனிமேல் ஜாலி: உயிரியல் பூங்கா திறந்தாச்சு!

கோவை:பல மாதங்களாக மூடப்பட்டு இருந்த, மாநகராட்சி உயிரியல் பூங்கா, மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோவை வ.உ.சி., பூங்கா அருகில் மநாகராட்சி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பெலிக்கான், நீர் காகம் உள்ளிட்ட பறவைகள், பல வகையான பாம்புகள் என, 538 உயிரினங்கள் உள்ளன.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020ம் ஆண்டு மார்ச், 23ம் தேதி முதல் உயிரியல் பூங்கா மூடப்பட்டது. அதன் பிறகு பலமுறை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், இந்த உயிரியல் பூங்கா மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இப்போது மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதால், 17 மாதங்களுக்கு பிறகு, உயிரியல் பூங்கா திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உயிரியல் பூங்கா இயக்குனர் டாக்டர் செந்தில்நாதன் கூறியதாவது:பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மட்டுமல்ல, விலங்குகள் மற்றும் பறவைகளின் பாதுகாப்பு கருதியே உயிரியல் பூங்கா மூடப்பட்டது. ஊரடங்கால் பல மாதங்கள் மூடியிருந்தாலும், இங்குள்ள விலங்குகளுக்கு சரியான உணவு கொடுத்து, முறையாக பராமரித்து வருகிறோம்.அரசு அனுமதி அளித்து இருப்பதால், காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். கட்டாயம் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உள்ளே எங்கும் உட்கார அனுமதி இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X