அரசியல் செய்தி

தமிழ்நாடு

விரைவில் அதிரடி! தமிழக பா.ஜ.,வில் செயல்படாத தலைவர்களுக்கு 'கல்தா'

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை:தமிழக பா.ஜ.,வில் சரிவர செயல்படாத மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோருக்கு, அதிரடியாக 'கல்தா' கொடுத்து விட்டு, இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் பதவிகளை வழங்க, அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அத்துடன், தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பரிசாக, முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், மணிப்பூர்
விரைவில் அதிரடி! ,தமிழக பா.ஜ.,வில்,செயல்படாத தலைவர்களுக்கு, 'கல்தா'

சென்னை:தமிழக பா.ஜ.,வில் சரிவர செயல்படாத மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோருக்கு, அதிரடியாக 'கல்தா' கொடுத்து விட்டு, இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் பதவிகளை வழங்க, அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அத்துடன், தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பரிசாக, முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து, தமிழகத்திற்கும் விரைவில் புதிய கவர்னர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு தொண்டர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த போது, மாநில, மாவட்ட அளவிலான பொறுப்புகள், கட்சியில் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. அதில் பலர், பொறுப்புகளை வைத்துக் கொண்டு, தங்களை வளர்த்துக் கொள்வதில் மட்டும் ஆர்வம் காட்டுவதாகவும், கட்சி பணிகளில் சரிவர ஈடுபடாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

அவர்களில் பலர், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் கூட உறுப்பினர்களை சேர்க்காமலும், கட்சி அறிவிக்கும் நிகழ்ச்சிகள், கூட்டங்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்காமலும் உள்ளதாக புகார்கள் குவிகின்றன.


தேர்தலில் உள்ளடி?

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டது. மத்தியில் ஆட்சி, மாநிலத்தில் ஆளுங்கட்சியுடன் கூட்டணி என்பதையும் தாண்டி, மாநில அரசையே கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் என்ற, அசுர பலத்துடன் தேர்தலை சந்தித்த பா.ஜ., நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

மாநில, மாவட்ட நிர்வாகிகள், முழு வீச்சில் தேர்தல் பணியாற்றி இருந்தால், 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கலாம். இரட்டை இலக்கில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு சென்றிருப்பர். இதையே, கட்சியின் தேசிய தலைமையும் எதிர்பார்த்தது.சில மாவட்டங்களில் நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை. தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை பதுக்கி விட்டதாகவும், 'சீட்' கிடைக்காத அதிருப்தியில் உள்ளடி வேலைகளிலும் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.


இளைஞர்கள் ஆர்வம்

தமிழக பா.ஜ., தலைவராக, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின், அவரின் பேச்சில் வெளிப்படும் நேர்மையான செயல்பாட்டை பார்த்து, எப்போதும் இல்லாத வகையில், அதிக இளைஞர்கள் பா.ஜ.,வில் சேர்ந்து வருகின்றனர்.இதனால், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், எப்போதும் திருவிழா கூட்டம் போல தொண்டர்கள் கூட்டம் காணப்படுகிறது.

இம்மாதம் 10ல் சென்னை வந்த பா.ஜ., தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ், முக்கிய நிர்வாகிகளுடன் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், 'அண்ணாமலை மிகவும் கெட்டிக்காரர்; திறமைசாலி. அவரை நன்கு பயன்படுத்தி, கட்சியை பலப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் கட்சியின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்' என்று, நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். அத்துடன், கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, கட்சி பணிகளில் சரிவர செயல்படாத மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக நீக்கிவிட்டு, இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் பதவிகளை வழங்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது; இதற்கான நடவடிக்கைகள் விரைவில் துவங்க உள்ளன.

இது தவிர, தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும் பரிசாக, முக்கிய பொறுப்புகள் வழங்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.அண்ணாமலை மாநில தலைவராக பதவி ஏற்றதால், அவர் வகித்த துணைத் தலைவர் பதவி காலியாக உள்ளது. எனவே, அந்த பதவிக்கு புதியவரை நியமிப்பது உட்பட, மாநில நிர்வாகத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.​


இன்று ஆலோசனை

இந்நிலையில், அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், இன்று கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இதில், கட்சியில் உள்ள 60 மாவட்ட தலைவர்கள் மற்றும் 'பிரபாரி' எனப்படும் மாவட்ட பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்; கட்சியை பலப்படுத்துவது மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.


கவர்னர் மாற்றம்?

தமிழகத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்; இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி நேற்று வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, தமிழக கவர்னரும் விரைவில் மாற்றப்பட்டு, புதிய கவர்னர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - Mangaf,குவைத்
23-ஆக-202117:12:42 IST Report Abuse
balakrishnan பி ஜெ பி இல் உண்மையில் உழைப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது .
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
23-ஆக-202117:07:13 IST Report Abuse
DVRR தயவு செய்து ஒரு இந்து கவர்னரை அனுப்பாதீர்கள் ஒரு முஸ்லீம் அல்லது கிறித்துவனை மட்டுமே அனுப்புங்கள் இல்லை என்றால் வந்த 15 நாளில் திமுக ஆட்சி கலை/கழிக்கப்படும்
Rate this:
Cancel
Jagabar Sadiq - Riyadh,சவுதி அரேபியா
23-ஆக-202116:43:00 IST Report Abuse
Jagabar Sadiq அப்ப கூண்டோட எல்லாருக்கும் கல்தா தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X