மாணவர்களுடன் திருநங்கையர் இணைந்து சாலை விழிப்புணர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுடன் திருநங்கையர் இணைந்து சாலை விழிப்புணர்வு

Added : ஆக 22, 2021
Share
கோவை:கல்லுாரி மாணவர்கள் மற்றும் திருநங்கைகள் இணைந்து, கொரோனா மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ரோட்ரேக்ட் கிளப் ஆப் கோவை காட்டன் சிட்டியில், பல்வேறு பொறுப்புகளில் கல்லுாரி மாணவ, மாணவிகள் உள்ளனர். இவர்கள் 'விழித்திரு' என்ற பெயரில் காந்திபுரம், பஸ் ஸ்டாண்ட் சிக்னலில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், கொரோனாவில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள,
 மாணவர்களுடன் திருநங்கையர்  இணைந்து சாலை விழிப்புணர்வு

கோவை:கல்லுாரி மாணவர்கள் மற்றும் திருநங்கைகள் இணைந்து, கொரோனா மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ரோட்ரேக்ட் கிளப் ஆப் கோவை காட்டன் சிட்டியில், பல்வேறு பொறுப்புகளில் கல்லுாரி மாணவ, மாணவிகள் உள்ளனர். இவர்கள் 'விழித்திரு' என்ற பெயரில் காந்திபுரம், பஸ் ஸ்டாண்ட் சிக்னலில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், கொரோனாவில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள, சாலை பாதுகாப்பில் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும், பொதுமக்களுக்கு விளக்கினர்.மாணவர்கள் ஐந்து பேர் குழுவாக பிரிந்து கொண்டு, கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதை தொடர்ந்து சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, கார்களில் சீட் பெல்ட் அணிந்து வருவோர், ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகள், முக கவசம் அணிந்த நபர்களுக்கு, பாராட்டு தெரிவித்து மரக்கன்றுகளை வழங்கினர். அப்போது அங்கு இருந்த திருநங்கைகளும், மாணவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X