பொது செய்தி

தமிழ்நாடு

'மரக்கன்று நடுவது பெரிதில்லை: தொடர்ந்து பராமரிப்பது முக்கியம்'

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகர சாலைகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும், 'பசுமை தொடர்ச்சி' அமைப்பினர், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.காந்திபுரத்தில் டாடாபாத், கிராஸ்கட் ரோடு, சிவானந்தா காலனி, 100 அடி ரோடு, ஆறு முக்கு, ராம் நகர் பகுதிகளில் இந்த குழுவினர் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர்.தண்ணீர் ஊற்றுவதுடன், பாதுகாப்பும் செய்கின்றனர்.இந்த அமைப்பில் இருக்கும் 20 பேரும்,

கோவை:கோவை மாநகர சாலைகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும், 'பசுமை தொடர்ச்சி' அமைப்பினர், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.காந்திபுரத்தில் டாடாபாத், கிராஸ்கட் ரோடு, சிவானந்தா காலனி, 100 அடி ரோடு, ஆறு முக்கு, ராம் நகர் பகுதிகளில் இந்த குழுவினர் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர்.
தண்ணீர் ஊற்றுவதுடன், பாதுகாப்பும் செய்கின்றனர்.இந்த அமைப்பில் இருக்கும் 20 பேரும், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வேலைகளையும் ஒதுக்கி விட்டு, மரக்கன்று பராமரிப்பில் ஈடுபடுகின்றனர்.'பசுமை தொடர்ச்சி' என்ற இந்த அமைப்பின் அறங்காவலர் பிரகாஷ் கூறுகையில், ''லட்சக்கணக்கில் மரக்கன்றுகளை நடவு செய்வது பெரிதில்லை. முறையாக பராமரிக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.

நாங்கள் நடவு செய்த மரக்கன்றுகள் 234 தான். எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அனைத்தையும் முறையாக தண்ணீர் விட்டு பராமரித்து, பாதுகாத்து வருகிறோம்.''நெரிசல் மிகுந்த நகர சாலைகளில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மரக்கன்றுகள் அவசியம். அந்த நோக்கத்தில், நடவு செய்த எந்த ஒரு மரக்கன்றும் பட்டுப்போகாமல், ஐந்தாண்டுகளாக பாதுகாத்து வருகிறோம். மரக்கன்று நடுவது பற்றி, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X