பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
வெள்ளத்தால் பயிர்கள் சேதம்லே: யூனியன் பிரதேசமான லடாக்கின் ரும்பக் கிராமம் அருகே ஜன்ஸ்கர் ஆற்றில் அடைப்பு ஏற்பட்டதால், ஏரி போல் தண்ணீர் தேங்கியது. இதில் நேற்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டதால் உருவான வெள்ளப்பெருக்கில் அங்குள்ள பாலம் உடைந்ததுடன், பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்தன. உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றாலும், மீட்பு படையினர் தயாராக உள்ளதாக அதிகாரிகள்

வெள்ளத்தால் பயிர்கள் சேதம்

லே: யூனியன் பிரதேசமான லடாக்கின் ரும்பக் கிராமம் அருகே ஜன்ஸ்கர் ஆற்றில் அடைப்பு ஏற்பட்டதால், ஏரி போல் தண்ணீர் தேங்கியது. இதில் நேற்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டதால் உருவான வெள்ளப்பெருக்கில் அங்குள்ள பாலம் உடைந்ததுடன், பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்தன. உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றாலும், மீட்பு படையினர் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.-------

போலி ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்?

ஹரித்வார்: உத்தரகண்டின் ஹரித்வாரில் ஏப்ரலில் நடந்த கும்பமேளாவில், ஒப்பந்த அடிப்படையில் பல ஆய்வகங்கள், பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தின. இதில் லட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை நடத்தாமலேயே முடிவுகள் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டினை தொடர்ந்து, இரு ஆய்வகங்கள் மீது வழக்கு பதிவானது.இந்நிலையில் ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் பட்டியலை வெளியிட்டது. இதில், வழக்கில் சிக்கிய இரு ஆய்வகங்களும் இடம்பெற்று உள்ளதாக புகார் எழுந்துள்ளது.----------------

முன்னாள் அமைச்சர் கைது

பங்கூரா: மேற்கு வங்கத்தில் கடந்த திரிணமுல் காங்., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி. சமீபத்திய சட்டசபை தேர்தலுக்கு முன், அவர் பா.ஜ.,வில் இணைந்தார். இந்நிலையில் அவர் அமைச்சராக இருந்தபோது 'இ -- டெண்டர்' வெளியிட்டதில், 9.91 கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நேற்று கைது செய்யப்பட்டார்.---------------

ஜி.எஸ்.டி.,யில் விலக்கு

புதுடில்லி: தொழிலாளர்களுக்கு 'கேன்டீன்' வசதிக்காக வசூலிக்கும் தொகைக்கு ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவது தொடர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத்தில் உள்ள விதிகள் தொடர்பான அதிகார மையத்தை அணுகியது. விசாரணை முடிவில், 'ஊழியர்களின் கேன்டீன் வசதிக்காக பெறும் தொகை லாப நோக்கமற்றது என்பதால், அதற்கு ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டிய அவசியம் இல்லை' என, உத்தரவிடப்பட்டது.------------

கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

கவுஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமின் கோக்ராஜர் அருகே போட்கானில் நேற்று அதிகாலை அலகாபாத் வங்கி கிளையின் கதவுகளை உடைத்து, சிலர் கொள்ளையடிக்க முயன்றனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வங்கி கதவுகளை உடைக்க பயன்படுத்திய ஆக்சிஜன் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பிய மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X