சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பீரோ சாவியை தேடிய திருடன்; 3 பவுன், ரூ.20 ஆயிரத்துடன் கைது

Added : ஆக 22, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடியில் நேற்று அதிகாலையில் 3வது வீட்டில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பரமக்குடி பட்டாபிசீதாராமன் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி.இவர் நேற்று அதிகாலை எழுந்த போது, தனது வீட்டில் பீரோவின் அருகில் சாவியை தேடிய படி, ஒருவர் நிற்பதை கண்டு மின்விளக்கை எரியவிட்டுள்ளார். அங்கிருந்த திருடன் அவரை தள்ளிவிட்டு தப்பினார்.
 பீரோ சாவியை தேடிய திருடன்; 3 பவுன், ரூ.20 ஆயிரத்துடன் கைது

பரமக்குடி : பரமக்குடியில் நேற்று அதிகாலையில் 3வது வீட்டில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பரமக்குடி பட்டாபிசீதாராமன் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி.இவர் நேற்று அதிகாலை எழுந்த போது, தனது வீட்டில் பீரோவின் அருகில் சாவியை தேடிய படி, ஒருவர் நிற்பதை கண்டு மின்விளக்கை எரியவிட்டுள்ளார். அங்கிருந்த திருடன் அவரை தள்ளிவிட்டு தப்பினார். தொடர்ந்து கூச்சலிடவே அக்கம் பக்கம் இருந்தவர்கள் துரத்தினர்.காமராஜர் நகரில் வீட்டின் மாடியில் சிக்கினார். அப்போது கூடி நின்ற மக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து அவரிடம் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் முகிலன் குடியிருப்பைச் சேர்ந்த அய்யாப்பழம் மகன் சுடலை பழம், 50, என்பதும்,தொடர்ந்து பரமக்குடியில் இரவு 2 வீடுகளில் திருடி விட்டு 3வதாக லட்சுமி வீட்டில் சென்றபோது சிக்கியது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X