தமிழ்நாடு

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் கழிவுநீர் கலப்பால் துர்நாற்றம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் மழை நீருடன் கழிவு நீர் கலந்ததால், துர்நாற்றம் வீசியது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடுவது வழக்கம். சில ஆண்டுக்கு முன் கோயில் ரதவீதி, கிழக்கு தெரு, மண்டிதெரு பகுதியில் உள்ள தனியார் விடுதிகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக அக்னி தீர்த்த கடலில்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் மழை நீருடன் கழிவு நீர் கலந்ததால், துர்நாற்றம் வீசியது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடுவது வழக்கம். சில ஆண்டுக்கு முன் கோயில் ரதவீதி, கிழக்கு தெரு, மண்டிதெரு பகுதியில் உள்ள தனியார் விடுதிகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக அக்னி தீர்த்த கடலில் கலந்து துர்நாற்றம் வீசி, பக்தர்களுக்கு அலர்ஜி ஏற்பட்டது.மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி, நகராட்சி நிர்வாகம் கழிவுநீரை சுத்திகரித்து, அந்நீரை அக்னி கடலில் கலக்காமல் 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஓலைகுடா சங்குமால் கடலில் கலக்க ஏற்பாடு செய்தது.

அக்னி தீர்த்தத்தில் சுகாதாரம் பராமரித்த நிலையில், நேற்று ராமேஸ்வரத்தில் திடீரென மழை பெய்தது.இதில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து மீண்டும்அக்னி தீர்த்த கடலில் கலந்து துர்நாற்றம் வீசியது.பக்தர்கள் அருவருப்புடன் நீராடி சென்றனர். அக்னி கடலில் தொடர்ந்து சுகாதாரம் பராமரிக்க நகராட்சிக்கு கலெக்டர் சந்திரகலா உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X