தாலுகா அலுவலக ரோட்டில் நெரிசல்; வாகன ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் திணறல்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி தாலுகா அலுவலக ரோட்டில் நாள் முழுவதும் வாகன நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர்.இந்த ரோட்டில் சப்-ரிஜிஸ்டர் ஆபீஸ்,பொதுப்பணித்துறை, தாலுகா அலுவலகம், தனியார் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், பயணியர் விடுதி, வங்கி மற்றும் வணிக நிறுவனங்கள்உள்ளது.ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள்நிறுத்தப்படுகிறது. மேலும் தாலுகா அலுவலகம்அருகில் இரண்டு பஸ்

பரமக்குடி : பரமக்குடி தாலுகா அலுவலக ரோட்டில் நாள் முழுவதும் வாகன நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த ரோட்டில் சப்-ரிஜிஸ்டர் ஆபீஸ்,பொதுப்பணித்துறை, தாலுகா அலுவலகம், தனியார் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், பயணியர் விடுதி, வங்கி மற்றும் வணிக நிறுவனங்கள்உள்ளது.ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள்நிறுத்தப்படுகிறது. மேலும் தாலுகா அலுவலகம்அருகில் இரண்டு பஸ் ஸ்டாப்களும் குறுகிய இடத்தில் இருப்பதால்பயணிகள் நிற்க முடியாமல் திணறுகின்றனர். இங்கு பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க முடியாமல் திணறுகின்றனர்.

இப்பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு முதியோர் முதல் பல்வேறு தரப்பினர் வந்து செல்லும்நிலையில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. ஆற்றுப்பாலம் வழியாக தாலுகா அலுவலக ரோடு சந்திக்கும் இடத்தில் மிகப் பெரிய வளைவு, ஆற்றுப்பாலத்தின் எதிரில் போஸ்ட் ஆபீஸ் ரோடு, பெரிய பஜார் செல்லும் வழி என நான்கு முனை சந்திப்புகளையும் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளது.இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X