பொது செய்தி

தமிழ்நாடு

சினிபிட்ஸ்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
தொழிலதிபரான கீர்த்தி சுரேஷ்நடிகையர் நடிப்பு தொழிலை மட்டுமே நம்பாமல், ஏதாவது ஒரு தொழிலை துவக்குவர். அந்த பட்டியலில் கீர்த்தி சுரேசும் இணைந்துள்ளார். அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும், 'பூமித்ரா' என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளார். 'ஆர்கானிக்' முறையில் உருவாகும் அழகு சாதன பொருட்களை, 'ஆன்லைன்' மூலம் விற்பனை செய்ய இணையதளத்தையும் உருவாக்கியுள்ளார்.செப்., 10ல்
 சினிபிட்ஸ்

தொழிலதிபரான கீர்த்தி சுரேஷ்நடிகையர் நடிப்பு தொழிலை மட்டுமே நம்பாமல், ஏதாவது ஒரு தொழிலை துவக்குவர். அந்த பட்டியலில் கீர்த்தி சுரேசும் இணைந்துள்ளார். அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும், 'பூமித்ரா' என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளார். 'ஆர்கானிக்' முறையில் உருவாகும் அழகு சாதன பொருட்களை, 'ஆன்லைன்' மூலம் விற்பனை செய்ய இணையதளத்தையும் உருவாக்கியுள்ளார்.செப்., 10ல் 'அண்ணாத்த' போஸ்டர்? சிறுத்தை சிவா இயக்க, ரஜினி, நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள, அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 'டப்பிங்' உள்ளிட்ட இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் முதல் போஸ்டர், விநாயகர் சதுர்த்தியான செப்., 10ல் வெளியாகும் என, அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.உலக மொழிகளில் '105 மினிட்ஸ்'கதை நாயகியாக ஹன்சிகா மோத்வானி நடித்த, 105 மினிட்ஸ் படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மட்டுமின்றி, சைனீஸ், கொரியன் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும், 15 நாள் ஒத்திகைக்கு பின், ஆறு நாட்களில் படமாக்கப்பட்டு உள்ளது. தலா 20 நிமிடங்கள் கொண்ட ஆறு 'சீக்குவன்ஸ்' காட்சிகள் உள்ளன. 105 நிமிடங்களில் நடப்பதை கதையாக வடிவமைத்து உள்ளனர். 'ஒரு கதாபாத்திரத்தை வைத்து, முழுப் படமும் ஒரே 'ஷாட்'டில் வரும்படியான முதல் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது' என, இயக்குனர் ராஜா துஷா கூறியுள்ளார்.விருந்து நிச்சயம்!'ஸ்கைமேன் பிலிம்ஸ்' சார்பில், கலைமகன் முபாரக் தயாரிக்க, சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும், இடிமுழக்கம் படத்தில், மலையாள உலகில் புகழ் பெற்ற வினித் சீனிவாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார், காயத்ரி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.கலைமகன் முபாரக் கூறுகையில், ''முகேன் நடித்துள்ள, வேலன் படத்தின் வெளியீட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நேரத்தில், இடிமுழக்கம் படம் அழகாக உருவாகி வருவது மகிழ்ச்சி. சீனு ராமசாமியின் இயல்பான, வித்தியாசமான உருவாக்கத்தில், வினித் சீனிவாசன் பாடிய பாடல், இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்,'' என்றார்.ஷித்தி இசை வெளியீடுதமிழ் மற்றும் மலையாளத்தில், ஷித்தி படம், 'த்ரில்லர்' பாணியில் உருவாகி உள்ளது. குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும், மனதோடும் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.மலையாள சினிமாவில் இயக்குனரும், நாயகனுமாக உள்ள அஜி ஜான் நாயகனாக நடிக்க, இந்திய கால்பந்தாட்ட வீரர் விஜயன், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பயஸ் ராஜ் படத்தை எழுதி இயக்கி உள்ளார். படத்திற்கு ரமேஷ் நாராயண் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீடு கொச்சியில் நடந்தது.இணையும் புதுக் கூட்டணி!மலையாள இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் இயக்க உள்ள புதுப் படத்தில், கமலும், சூர்யாவும் இணைந்து நடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, இயக்குனர் அமல் நீரத் கூறுகையில், ''கமலையும், சூர்யாவையும் மனதில் வைத்து, கதை உருவாக்கி விட்டேன். இதை இருவரிடமும் தெரிவித்தேன்; இணைந்து நடிக்க சம்மதித்து உள்ளனர். திரைக்கதைக்கு இறுதி வடிவம் தரும் முயற்சியில் உள்ளேன்,'' என்றார்.'இந்தியன் - 2' எப்போது?''இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்து விட்டது. படத்தை முடிக்க பேச்சு நடந்து வருகிறது. விக்ரம் பட பணிகள் முடிந்ததும், இந்தியன் - 2 பட வேலைகள் ஆரம்பமாகும்,'' என, கமல் கூறியுள்ளார்.'யுத்த சத்தம்' கேட்குமா?பார்த்திபன், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்திற்கு, யுத்த சத்தம் என, தலைப்பு வைத்துள்ளனர். படத்தை எழில் இயக்குகிறார். விஜயகுமரன் தயாரிக்க, டி.இமான் இசைஅமைக்கிறார். படத்தின் முதல் போஸ்டரை விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார்.ஏப்., 14ல் 'கே.ஜி.எப் - 2!'கே.ஜி.எப் - 2 படம் அடுத்தாண்டு ஏப்., 14ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படத்தில், யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X