தமிழ்நாடு

சிறிய மழைக்கு கூட தாங்காத ராமநாதபுரம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் சிறிதுநேரம் மிதமான மழைபெய்தது. இதன் காரணமாக அரண்மனை, அக்ரஹார, சாலைத்தெரு ரோட்டில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.ராமநாதபுரத்தில் வெயில் குறைந்து காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அரைமணிநேரம் மிதமான மழை பெய்தது. பஸ் ஸ்டாண்ட், அரண்மனை பகுதியில் தரைக்கடை, தள்ளுவண்டிகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. மழைநீர்
 சிறிய மழைக்கு கூட தாங்காத ராமநாதபுரம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் சிறிதுநேரம் மிதமான மழைபெய்தது. இதன் காரணமாக அரண்மனை, அக்ரஹார, சாலைத்தெரு ரோட்டில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

ராமநாதபுரத்தில் வெயில் குறைந்து காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அரைமணிநேரம் மிதமான மழை பெய்தது. பஸ் ஸ்டாண்ட், அரண்மனை பகுதியில் தரைக்கடை, தள்ளுவண்டிகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. மழைநீர் செல்வதற்கு போதிய வடிகால் வசதி இல்லாததால் அக்ரஹாரரோடு, சாலைத்தெரு, ரயில்வே பீடர் ரோடு, அரண்மனை ரோடுகளில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகனஓட்டிகள் சிரமப்பட்டனர்.

இதேபோல பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை, சூரன்கோட்டை ஊராட்சி பகுதிகளில் ரோடு, தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆகையால் ரோட்டில் தேங்காமல் மழைநீர் செல்வதற்கு வடிகால் வசதி ஏற்படுத்த நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X