பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் ஆவணி அவிட்டம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி கோயில்களில் ஆவணி அவிட்ட விழாவையொட்டி, பூணுால் அணியும் வைபவம் நடந்தது.பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில், சுப்பிரமணி சுவாமி கோயில், எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் ஏராளமானவர்கள் காயத்ரி மந்திரம் உள்ளிட்டவைகளை ஜபித்து, தங்களது பூணுாலை மாற்றி ஆவணி அவிட்டத்தை கொண்டாடினர்.மேலும் உபநயணம் நடத்தி வைக்கப்பட்ட குழந்தைகளுக்கு

பரமக்குடி : பரமக்குடி கோயில்களில் ஆவணி அவிட்ட விழாவையொட்டி, பூணுால் அணியும் வைபவம் நடந்தது.

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில், சுப்பிரமணி சுவாமி கோயில், எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் ஏராளமானவர்கள் காயத்ரி மந்திரம் உள்ளிட்டவைகளை ஜபித்து, தங்களது பூணுாலை மாற்றி ஆவணி அவிட்டத்தை கொண்டாடினர்.மேலும் உபநயணம் நடத்தி வைக்கப்பட்ட குழந்தைகளுக்கு பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது.

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் சன்னதி தெருவில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் புரோகிதர்கள், 7 வயது நிரம்பிய சிறுவர்கள் மற்றும் கோயில் குருக்கள், மகாராஷ்டிரா மடம், வீடுகளில் வியாசகரை வணங்கி வேத மந்திரம் முழங்கி புதிய பூணுால் அணிந்தனர்.

கீழக்கரை: திருப்புல்லாணி, கீழக்கரை, சிக்கல், சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆவணி அவிட்ட விழா கொண்டாடப்பட்டது.ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை அவிட்டம் நட்சத்திரத்தை முன்னிட்டு விஸ்வகர்மா மக்கள் வீட்டிலுள்ள பூஜை அறையில் மஞ்சள் பிள்ளையார்பிடித்து, தேங்காய் உடைத்து, பழங்களுடன் நெய்வேத்தியம் செய்து, தீபாராதனை செய்தனர்.காலையில் விரதம்இருந்து காயத்ரி மந்திரம்கூறி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பூணுால் அணிந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X