ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு: போக்குவரத்து நெரிசல்| Dinamalar

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு: போக்குவரத்து நெரிசல்

Added : ஆக 22, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம்-ராமேஸ்வரம் நெடுஞ்சாலை ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை கண்டபடி நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம், கீழக்கரை, துாத்துக்குடிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பஸ் ஸ்டாண்ட் முதல் பட்டணம்காத்தான் கிழக்குகடற்கரை வரை நான்குவழிச்சாலை
 ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு: போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம்-ராமேஸ்வரம் நெடுஞ்சாலை ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை கண்டபடி நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம், கீழக்கரை, துாத்துக்குடிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பஸ் ஸ்டாண்ட் முதல் பட்டணம்காத்தான் கிழக்குகடற்கரை வரை நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்தரோட்டில் நாளுக்குநாள் ஆக்கிரமிப்பு பெருகிவருகின்றன. குறிப்பாக புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் ரயில்வே பீடர்ரோடு, அரசு மருத்துவமனை ரோடு, பாரதிநகர், பட்டணம்காத்தான் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு, நான்குசக்கர வாகனங்களை ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.

இதனால் மேற்கண்ட இடங்களில் போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறது. இதுதொடர்பான புகாரில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். அதன்பின் தொடர் கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் ஆக்கிரமிப்பு வந்து விடுகிறது.ராமநாதபுரம்-ராமேஸ்வரம் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X