எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு துறை: களையெடுக்க பட்டியல் தயாரிப்பு

Added : ஆக 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் நடத்தப்படும், சோதனைகள் குறித்த ரகசிய தகவல்களை கசியவிடும், சந்தேக நபர்கள் குறித்த பட்டியல் தயாரிப்பு நடப்பதால், 'தங்கள் மீது நடவடிக்கை பாயுமோ' என, லஞ்ச ஒழிப்பு போலீசார் பலர், கலக்கத்தில் உள்ளனர்.ஆவணங்கள் சேகரிப்புஅரசிடம் சம்பளமாக பெற்ற பணத்தை தவிர, ஒவ்வொரு பொது ஊழியரும், தனக்குரிய அரசு பணியை செய்வதற்கோ,
லஞ்ச ஒழிப்பு துறை: களையெடுக்க பட்டியல் தயாரிப்பு

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் நடத்தப்படும், சோதனைகள் குறித்த ரகசிய தகவல்களை கசியவிடும், சந்தேக நபர்கள் குறித்த பட்டியல் தயாரிப்பு நடப்பதால், 'தங்கள் மீது நடவடிக்கை பாயுமோ' என, லஞ்ச ஒழிப்பு போலீசார் பலர், கலக்கத்தில் உள்ளனர்.


ஆவணங்கள் சேகரிப்பு

அரசிடம் சம்பளமாக பெற்ற பணத்தை தவிர, ஒவ்வொரு பொது ஊழியரும், தனக்குரிய அரசு பணியை செய்வதற்கோ, செய்யாமல் இருப்பதற்கோ, தாமதப்படுத்துவதற்கோ பணமோ, பொருளோ, வேறு ஏதேனும் சலுகையோ பெற்றால், அது ஊழல் என, லஞ்ச ஒழிப்பு துறை பிரகனடப்படுத்தி உள்ளது.ஆனால், ஊழல் ஒழிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள, சில அதிகாரிகள் மற்றும் போலீசார், மிகவும் ரகசியமாக செய்யப்படும் சோதனைகள் குறித்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரி வித்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில், ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி மற்றும் அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பினாமிகள் என, கூறப்படும் நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என, பல இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனைக்கான, ஆதாரங்களை திரட்டுதல், ஆவணங்கள் சேகரிப்பு, ஊழல் நடந்து இருப்பதற்கான தகவல்களை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட, முன் தயாரிப்பு பணிகள் மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்தன.

சோதனை குறித்து ரகசியம் காக்கப்பட வேண்டும் என, உயர் அதிகாரிகளும் உத்தரவிட்டனர். இருப்பினும், சோதனை நடப்பதற்கு முதல் நாள் இரவே, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போலீசார் தகவலை கசியவிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.


ஊழல்வாதிகள்

இதன் காரணமாக, வேலுமணி தன் வீடு உள்பட, 60 இடங்களில் சோதனை நடந்த போது, முன் கூட்டிய ஆட்களை திரட்டி, அந்த இடங்களில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.லஞ்ச ஒழிப்பு துறையில், கருப்பு ஆடுகள் போல செயல்படும் போலீசாரால், ஊழல்வாதிகள் உஷாராகி விடும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அதனால், 'களையெடுப்பு'அவசியம் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது.

அதற்கேற்ப, லஞ்ச ஒழிப்பு துறையில், மாநிலம் முழுதும் செயல்படும், 'சந்தேக போலீஸ்' குறித்து பட்டியல் தயாரிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, பல ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரியும் போலீசார், அரசியல் சார்பு அதிகாரிகள், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு துறைக்கு, புது ரத்தம் பாய்ச்சும் வகையில், அதிரடி நடவடிக்கை பாய உள்ளது. இதற்கு முதல்வரும் பச்சை கொடி காட்டிவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ரகசிய தகவல்களை கசியவிடும் போலீசார் 'மாட்டிக் கொள்வோமோ; நம் மீது நடவடிக்கை பாயுமோ' என்ற பீதியில் உறைந்துள்ளனர் என, சக போலீசாரே தெரிவிக்கின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
24-ஆக-202103:33:19 IST Report Abuse
meenakshisundaram இந்த முயற்சியில் இந்நாள் அமைச்சர்களும் அடங்குவார்களா ?
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
23-ஆக-202114:15:05 IST Report Abuse
JeevaKiran இதே போலீசார்தானே கடந்த பத்து ஆண்டுகளும் இருந்தார்கள். அப்போ ஏன் இந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேல் அ.வியாதிகள் ஆட்சியில் இருக்கும்போதே ஊழல் நடவடிக்கை எடுத்தால் வரும்காலத்தில் ஊழல் ஓரளவாவது குறையும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
23-ஆக-202108:46:58 IST Report Abuse
duruvasar அப்போ இனிமேல் கலெக்ஷன் கலெக்ஷன் கலெக்ஷன் மட்டும் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X