நிலக்கடலை, வாழைக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை, வாழைக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

Added : ஆக 22, 2021
Share
சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் நிலக்கடலை, வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீட்டை ஆக.,31க்குள் செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.காரீப் பருவத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதுார், திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நிலக்கடலை பயிர் செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு காப்பீடு தொகை 21,600

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் நிலக்கடலை, வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீட்டை ஆக.,31க்குள் செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரீப் பருவத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதுார், திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நிலக்கடலை பயிர் செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு காப்பீடு தொகை 21,600 ரூபாய். இதற்கு அரசு நிர்ணயித்துள்ள பிரீமியம் தொகை 2160 ரூபாய். அரசு மானியம் போக விவசாயிகளின் பங்குத்தொகையாக ஏக்கருக்கு 432 ரூபாய் செலுத்த வேண்டும். ஆக., 31 க்குள் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.

வாழை பயிருக்கு சிவகங்கை, திருப்புவனம், தேவகோட்டை பகுதியில் புளியால், சருகணி பகுதிகள், இளையான்குடியில் திருவுடையார்புரம், சிங்கம்புணரி பகுதிகளில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு காப்பீடு தொகை 45,900 ரூபாய், இதில் அரசு நிர்ணயித்துள்ள பிரீமியம் தொகை 18,819 ரூபாய். அரசு மானியம் போக விவசாயிகள் பங்கு தொகையாக 2295 ரூபாய் செலுத்தி செப்., 15க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிர் செய்துள்ள விவசாயிகள் வி.ஏ.ஓ.,அலுவலகத்தில் அடங்கலை பெற்று, ஆதார், வங்கி கணக்கு, உரிய கருத்துரு படிவத்துடன் தொடக்க கூட்டுறவு கடன் வங்கிகள், வர்த்தக வங்கிகள், பொது சேவை மையங்களில் உரிய காலத்திற்குள் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம், என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X