தமிழ்நாடு

மாவட்ட அரசு மருத்துவமனையில் கொட்டிக் கிடக்குது பிரச்னைகள்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி சூரக்குடி சாலையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏராளமான பிரச்னைகள் உள்ளதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.காரைக்குடியில் ரயில்வே பீடர் சாலை மற்றும் சூரக்குடி சாலை என இரண்டு இடங்களில், மாவட்ட அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இரண்டு இடங்களில் செயல்படும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மக்கள் அலையும் சூழல் உள்ளது. புறநோயாளிகள்

காரைக்குடி : காரைக்குடி சூரக்குடி சாலையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏராளமான பிரச்னைகள் உள்ளதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

காரைக்குடியில் ரயில்வே பீடர் சாலை மற்றும் சூரக்குடி சாலை என இரண்டு இடங்களில், மாவட்ட அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இரண்டு இடங்களில் செயல்படும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மக்கள் அலையும் சூழல் உள்ளது. புறநோயாளிகள் புறக்கணிப்பு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவனைக்கு ஒன்றரை மணிநேர பயணம், மருத்துவர்கள் பற்றாக்குறை, என பல்வேறு பிரச்னை நிலவி வருகிறது.

மக்கள் மன்றம் ராஜ்குமார் கூறுகையில்; காரைக்குடி அரசு மருத்துவமனை பெயரளவில் மட்டுமே தலைமை மருத்துவமனையாக உள்ளது. இது பிரசவம் பார்க்கும் ஆரம்ப சுகாதார நிலையமாகவே செயல்படுகிறது. இதனை மாற்ற வேண்டும். விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சூழல் நிலவுவதால், வழியிலேயே பலர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

தலைமை மருத்துவமனையான இங்கு ஐ.சி.யு., வசதி இல்லை. மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். மேலும் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, உள்ளிட்ட இயற்கை மருத்துவம் பார்க்கும் 24 மணிநேர மாடல் மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X