சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி : பான்மசாலா விற்றவர்கள் கைது

Added : ஆக 22, 2021
Share
Advertisement
காட்டூர், சாய்பாபா காலனி மற்றும் சரவணம்பட்டி போலீசார், நேற்று முன்தினம் தங்கள் பகுதிகளிலுள்ள கடைகளில் சோதனையிட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட பான்மசாலா பொருட்களை, விற்பனை செய்த பிரபு, 37, செல்வகுமார், 33, ராம்நாத், 25 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.லாட்டரி விற்றவர்

காட்டூர், சாய்பாபா காலனி மற்றும் சரவணம்பட்டி போலீசார், நேற்று முன்தினம் தங்கள் பகுதிகளிலுள்ள கடைகளில் சோதனையிட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட பான்மசாலா பொருட்களை, விற்பனை செய்த பிரபு, 37, செல்வகுமார், 33, ராம்நாத், 25 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

லாட்டரி விற்றவர் கைது

சாய்பாபாகாலனி போலீசார் நேற்று முன்தினம் கே.கே., புதுார் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், 43 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த, கேரள லாட்டரி சீட்டுக்கள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
மது விற்றவர்கள் கைது
சாய்பாபாகாலனி, ரத்தினபுரி, குனியமுத்துார், பீளமேடு மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் தங்கள் பகுதிகளில், திடீர் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 100 மது பாட்டில்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X