பொது செய்தி

தமிழ்நாடு

6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடிக்கு மருத்துவ இணை இயக்குனர் அலுவலகம் கொண்டுவர முடியாது என்றும், தமிழகத்தில் இன்னும் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.காரைக்குடி அரசு மருத்துவமனையில் காணல் அறக்கட்டளை சார்பில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சேமிப்புக்கலன், 24 மணிநேர தடுப்பூசி செலுத்தும் மையத்தை துவக்கி

காரைக்குடி : காரைக்குடிக்கு மருத்துவ இணை இயக்குனர் அலுவலகம் கொண்டுவர முடியாது என்றும், தமிழகத்தில் இன்னும் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

காரைக்குடி அரசு மருத்துவமனையில் காணல் அறக்கட்டளை சார்பில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சேமிப்புக்கலன், 24 மணிநேர தடுப்பூசி செலுத்தும் மையத்தை துவக்கி வைத்து பேசினார். அதில், தமிழகத்தில் 2 கோடியே 80 லட்சத்து 57 ஆயிரத்து 397 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இன்னும் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். கையிருப்பில் 15 லட்சம் தடுப்பூசிகளே உள்ளது.

இணை இயக்குநர் அலுவலகம், மருத்துக்கல்லுாரி மருத்துவமனை அருகே இருப்பது தான் நல்லது. அதனை காரைக்குடிக்கு மாற்ற முடியாது. காரைக்குடியில் செயல்படும் இரண்டு மருத்துவமனைகளும், அதே இடங்களில் சிறப்பான வசதியுடனும், கட்டமைப்புடனும் முழு தகுதி படைத்த அரசு மருத்துவமனையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையேற்றார். மாங்குடி எம்.எல்.ஏ., வாழ்த்தினார். காணல் சமுதாய கண் மருத்துவ சேவை தலைவர் அழகப்பன் வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X