மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்

Added : ஆக 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-தமிழகத்தை சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், 76, மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.வடகிழக்கு மாநில மான மணிப்பூர் கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா, இம்மாத துவக்கத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத், மணிப்பூர் மாநில பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.ஜனாதிபதி உத்தரவுஇந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.,
 மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்

புதுடில்லி-தமிழகத்தை சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், 76, மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

வடகிழக்கு மாநில மான மணிப்பூர் கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா, இம்மாத துவக்கத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத், மணிப்பூர் மாநில பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.ஜனாதிபதி உத்தரவுஇந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசனை, வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் கவர்னராக நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

மணிப்பூர் மாநிலத்தின், 17வது கவர்னராக இல.கணேசன் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.தமிழகத்தின் தஞ்சாவூரில், 1945ல் பிறந்த கணேசன், இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அதில் இணைந்து செயல்பட்டார்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பிரசாரகராகவும் பணி புரிந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர், தமிழக பா.ஜ., தலைவர், பொதுச்செயலர் மற்றும் தேசிய செயலர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

கடந்த 2009, 2014 லோக்சபா தேர்தலில் தென்சென்னை தொகுதி யில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தார்.பின், 2016ல் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார். தற்போது, கட்சி தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். அவருக்கு, மணிப்பூர் கவர்னர் பதவி கிடைத்துள்ளது. மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இது குறித்து, இல.கணேசன் கூறுகையில், ''என் சேவை அங்கீகரிக்கப்பட்டது குறித்து, மிகவும் பெருமையாக உள்ளது. வடகிழக்கு மாநில மக்களுக்கு சேவை செய்ய மகிழ்ச்சியுடன் செல்கிறேன்,'' என்றார்.

தலைவர்கள் வாழ்த்து

மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள, இல.கணேசனுக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர், தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.முதல்வர் ஸ்டாலின், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ம.க., தலைவர் ராமதாஸ், த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கௌடில்யன் - Chennai ,இந்தியா
24-ஆக-202106:22:38 IST Report Abuse
கௌடில்யன் சுய சரிதை எழுத வாய்ப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X