ஒண்டிப்புதுார் தெருவிளக்குகள் ஒன்று கூட எரிவதில்லை!

Added : ஆக 22, 2021
Share
Advertisement
போக்குவரத்து நெரிசல்ஆர்.எஸ்.புரம், வி.வி.சி.லே-அவுட் ரோட்டின் இருபுறமும், வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- முரளிதரன், ஆர்.எஸ்.புரம்.விளக்குகள் எரிவதில்லைஒண்டிப்புதுார், எஸ்.எம்.எஸ்.,லே-அவுட் செல்லும் வழியில் உள்ள, மின் கம்பங்களில், ஒன்றில் கூட விளக்கு எரிவதில்லை. இதனால், இப்பகுதி கும்மிருட்டாக காட்சியளிக்கிறது.

போக்குவரத்து நெரிசல்ஆர்.எஸ்.புரம், வி.வி.சி.லே-அவுட் ரோட்டின் இருபுறமும், வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- முரளிதரன், ஆர்.எஸ்.புரம்.

விளக்குகள் எரிவதில்லைஒண்டிப்புதுார், எஸ்.எம்.எஸ்.,லே-அவுட் செல்லும் வழியில் உள்ள, மின் கம்பங்களில், ஒன்றில் கூட விளக்கு எரிவதில்லை. இதனால், இப்பகுதி கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்.- செந்தில், எஸ்.எம்.எஸ்.லே-அவுட்.

குடிநீர் குழாய் அருகே சங்கடம்இருகூர் - ஒண்டிப்புதுார் ரோட்டில், பொது குடிநீர் குழாய் இருக்கும் இடம் அசுத்தமாக உள்ளது. இதன் அருகில், செருப்புகளும் விற்பனைக்காக கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதால், மக்கள் குழாயில் குடிநீர் பிடிக்க யோசிக்கின்றனர்.- கதிரவன், இருகூர்.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 39வது வார்டுக்கு உட்பட்ட, பீளமேட்டில் உள்ள, மின் கம்பத்தில்(எண்:23) கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.- தியாகு, பீளமேடு.

சாக்கடை கால்வாயை சீரமைக்கணும்சுந்தராபுரம், சாரதா மில் ரோடு, நேரு வீதியில், சாக்கடை கால்வாய் சுவர் சிதிலமடைந்து, கால்வாய்க்குள் விழுந்துள்ளது. இதை அகற்றுவதுடன், சாக்கடை கால்வாயையும் சீரமைக்க வேண்டும்.- குமாரசாமி, நேரு வீதி.

சாலை பணியை தொடரணும்தடாகம் ரோடு, இடையர்பாளையம், காந்திநகர், அண்ணா வீதியில், சாலை செப்பனிடும் பணி துவக்கப்பட்டு, பாதியில் கைவிடப்பட்டுள்ளது. பாதியில் நிற்கும் பணியை, மீண்டும் துவக்கி, சாலையை செப்பனிட வேண்டும்.- திருஞானம், அண்ணா வீதி.

குப்பை அள்ளுவதில்லைஒண்டிப்புதுார், காந்தி நகர் -2க்கு உட்பட்ட பகுதிக்கு, துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. இதனால், இப்பகுதியில் குப்பை குவிந்துள்ளது. துர்நாற்றம் வீசுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- லிங்கேஷ், காந்திநகர்.

போக்குவரத்துக்கு இடையூறுசுந்தராபுரம், இடையர்பாளையம் ரோடு, ஆதிதிராவிடர் காலனி அருகில், பிரதான சாலையை ஆக்கிரமித்து, கட்டுமான பணிக்காக செங்கல் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- ராஜேந்திரன், இடையர்பாளையம்.

சாக்கடை கால்வாய் வசதியில்லைசெல்வபுரம், எல்.ஐ.சி., காலனி விரிவாக்கம் சாலையில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் வீடுகளுக்கு முன் தேங்கியுள்ளது. இப்பகுதியில், சாக்கடை கால்வாய் கட்ட வேண்டும்.- பத்மநாபன், எல்.ஐ.சி., காலனி.

சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 41வது வார்டுக்கு உட்பட்ட, கணபதி அசோக் நகர், மூன்றாவது வீதி சந்திப்பில், பிரதான சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது.- குமார்நாதன், அசோக் நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X