பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் ஆவணி அவிட்டம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடியில், ஆவணி அவிட்ட நட்சத்திர நாளான நேற்று பலர் புதிய பூணுால் அணிந்து கொண்டனர். பவுர்ணமியும், அவிட்ட நட்சத்திரமும் கூடிய ஆவணி அவிட்ட நாளை வேதம் கிடைத்த நாள், கல்வி திருநாள், வேதத்தின் ஆண்டுவிழா என்று முன்னோர்கள் போற்றியுள்ளனர்.நேற்று, காரைக்குடியில் உள்ள சங்கர மடம், ராமநவமி மண்டபம், கண்டனுார் பஜனை மடம், வீடுகளில் காயத்ரி மந்திரத்தை பாராயணம்

காரைக்குடி : காரைக்குடியில், ஆவணி அவிட்ட நட்சத்திர நாளான நேற்று பலர் புதிய பூணுால் அணிந்து கொண்டனர். பவுர்ணமியும், அவிட்ட நட்சத்திரமும் கூடிய ஆவணி அவிட்ட நாளை வேதம் கிடைத்த நாள், கல்வி திருநாள், வேதத்தின் ஆண்டுவிழா என்று முன்னோர்கள் போற்றியுள்ளனர்.

நேற்று, காரைக்குடியில் உள்ள சங்கர மடம், ராமநவமி மண்டபம், கண்டனுார் பஜனை மடம், வீடுகளில் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து புதிய பூணுால் மாற்றிக் கொண்டனர். கண்ணன் சாஸ்திரிகள், சங்கரவாத்தியார், ரவிசர்மா உள்ளிட்டோர் பல இடங்களில் பூணுால் அணியும் நிகழ்ச்சியை நடத்தினர்.திருப்புவனம்திருப்புவனம் முருகன் ஆலயத்தில் வேத பாராயண ஆசிரியர் முரளி தலைமையில் பூணுால் மாற்றி வேதபாராயணம் படித்தனர். ஏற்பாடுகளை கோவிந்தராஜன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X