ஏமாற்றும் மழை; விவசாயிகள் வேதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏமாற்றும் மழை; விவசாயிகள் வேதனை

Added : ஆக 22, 2021
Share
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிகளவு மழை பொழிவு இருந்தது. விவசாயிகள் பயிர் செய்வதில் எவ்வித சுணக்கமும் இல்லாமல் இருந்தது.கடந்த ஆண்டு ஜனவரியில் 117.45 மி.மீ., மழை பொழிவு இருந்தது. ஆண்டு சராசரி மழையளவு 904.6 மி.மீ., என்பது 1131.68 மி.மீ., மழை பொழிவாக இருந்தது. இந்தாண்டு மாவட்டத்தில் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதன்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிகளவு மழை பொழிவு இருந்தது. விவசாயிகள் பயிர் செய்வதில் எவ்வித சுணக்கமும் இல்லாமல் இருந்தது.

கடந்த ஆண்டு ஜனவரியில் 117.45 மி.மீ., மழை பொழிவு இருந்தது. ஆண்டு சராசரி மழையளவு 904.6 மி.மீ., என்பது 1131.68 மி.மீ., மழை பொழிவாக இருந்தது. இந்தாண்டு மாவட்டத்தில் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதன் காரணமாக கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாமல் போனது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. ஆழ்துளை கிணறுகளில் கூட தண்ணீர் இல்லாமல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட்டில் மாவட்டத்தில் சராசரி மழையளவு மி.மீ., ல் ஆக., 7 ல் 6.91, ஆக.,8 ல் 4.74, ஆக.,12 ல் 2.09, ஆக., 15 ல் 1.17, ஆக., 17 ல் 11.29, ஆக., 18 ல் 6.63, ஆக., 21 ல் 0.74, ஆக., 22 ல் 4.3, என மழை பதிவாகியுள்ளது. நேற்று மதியம் முழுவதும் மேகமாக இருந்தாலும் மழை பொழிவு இல்லாமல் ஏமாற்றியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X