சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வத்திராயிருப்பு வனப்பகுதியில் தீ விபத்து

Added : ஆக 22, 2021
Share
Advertisement
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு வனச்சரக மலைப்பகுதியில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீயை வனத் துறையினர் போராடி அணைத்தனர்.நெடுங்குளம், சேது நாராயணபுரம் கிராமத்திற்கிடையேயான பீட் 3 என்ற மலைப்பகுதியில் இறத்தைகல் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு மின்னல் தாக்கியதில் மரம், செடி, கொடிகளில் தீப்பிடித்து எரிந்தது. இதை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்து கூட

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு வனச்சரக மலைப்பகுதியில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீயை வனத் துறையினர் போராடி அணைத்தனர்.

நெடுங்குளம், சேது நாராயணபுரம் கிராமத்திற்கிடையேயான பீட் 3 என்ற மலைப்பகுதியில் இறத்தைகல் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு மின்னல் தாக்கியதில் மரம், செடி, கொடிகளில் தீப்பிடித்து எரிந்தது. இதை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்து கூட பொதுமக்கள் பார்க்க முடிந்தது.இந்நிலையில் வனத்துறை குழுவினர் மலையேறி சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். அப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் தீப்பரவல் தடுக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X