பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகோள்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, பொதுமக்களுக்கு, நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், கொரோனா தொற்று, சில தினங்களாக, குறைந்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, வாகனம் மூலம், நகராட்சி

செங்கல்பட்டு : செங்கல்பட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, பொதுமக்களுக்கு, நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், கொரோனா தொற்று, சில தினங்களாக, குறைந்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, வாகனம் மூலம், நகராட்சி நிர்வாகம், நகர் முழுதும் பொதுமக்களுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர்.அதைத் தொடர்ந்து, பழைய புதிய பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.இதை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி கூறியதாவது:செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில், கொரோனா தடுப்பூசி மையத்தில், வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X