பொது செய்தி

தமிழ்நாடு

சின்னவேடம்பட்டி ஏரியில் 175 வாரம் களப்பணி: ஆர்வலர்களுக்கு ஆதீனம் பாராட்டு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோவை:சின்னவேடம்பட்டி ஏரியில், 175 வாரங்களாக தொடர் களப்பணி மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், சான்று வழங்கி பாராட்டினார்.கோவை மாநகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி ஏரி, 200 ஏக்கர் பரப்பு கொண்டது. தண்ணீர் இன்றி, வறண்டு கிடந்த ஏரியை புனரமைக்கும் பணி, 2017ல் தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்

கோவை:சின்னவேடம்பட்டி ஏரியில், 175 வாரங்களாக தொடர் களப்பணி மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், சான்று வழங்கி பாராட்டினார்.

கோவை மாநகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி ஏரி, 200 ஏக்கர் பரப்பு கொண்டது. தண்ணீர் இன்றி, வறண்டு கிடந்த ஏரியை புனரமைக்கும் பணி, 2017ல் தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னார்வலர்கள் திரண்டு வந்து, ஏரியை சீரமைக்கும் பணி செய்கின்றனர். ஏரிக்கு தண்ணீர் வரும் எட்டு கிலோமீட்டர் ராஜவாய்க்கால், முழுமையாக தூர் எடுக்கப்பட்டுள்ளது.
ஏரியின் உட்பகுதியில், சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஏரியை சுற்றி 3 ஆயிரம் நாட்டுவகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்கும் பணியும் வாரம்தோறும் நடக்கிறது.ஏரியின் முக்கியத்துவம் பற்றி, சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக நீர்நிலையில், உயிர்வேலி அமைக்கும் பணியும் இங்கு நடக்கிறது. ஏரி புனரமைப்பின், 175ம் வார நிகழ்வு நேற்று நடந்தது. பணியை 2017ல் தொடங்கி வைத்த சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், நேற்றைய நிகழ்வில் பங்கேற்று, தன்னார்வலர்களுக்கு நற்சான்றிதழ், ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில், கவுசிகா நீர் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான தன்னார்வலர்கள், குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X