போலீஸ் செய்திகள்,

Added : ஆக 23, 2021
Share
Advertisement
வாலிபர் தற்கொலைஆண்டிபட்டி: ஆண்டிபட்டி புள்ளிமான்கோம்பையை சேர்ந்த வீரன் மகன் அருண்குமார் 19, பிளஸ் 2 படித்த இவர் தந்தையுடன் விவசாயம் செய்து வந்தார். சில மாதமாக இவர் பெண்களுடன் சேர்ந்து வேலை செய்வது, பெண்களை போன்று நடந்து கொள்வது போன்ற செயல்களில் இருந்துள்ளார். மற்றவர்களுடன் பழக முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால் அருண்குமார் விஷ மாத்திரையை தின்றார். தேனி அரசு

வாலிபர் தற்கொலை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி புள்ளிமான்கோம்பையை சேர்ந்த வீரன் மகன் அருண்குமார் 19, பிளஸ் 2 படித்த இவர் தந்தையுடன் விவசாயம் செய்து வந்தார். சில மாதமாக இவர் பெண்களுடன் சேர்ந்து வேலை செய்வது, பெண்களை போன்று நடந்து கொள்வது போன்ற செயல்களில் இருந்துள்ளார். மற்றவர்களுடன் பழக முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால் அருண்குமார் விஷ மாத்திரையை தின்றார். தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பலன் இன்றி இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

தேனி: கம்பம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தெரு சிவனம்மாள் 36. இவர் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கினார். கம்பம் தெற்கு போலீசார் கைது செய்தார். வருஷநாடு சிங்கராஜபுரம் இந்திராநகர் காலனி சின்னச்சாமி 40. இவர் அதேப்பகுதி சுடுகாட்டுப் பகுதியில் 2 கிலோ கஞ்சாவை பதுக்கினார். வருஷநாடு போலீசார் சின்னச்சாமியை கைது செய்தனர்.

மூதாட்டி தற்கொலை

ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் பகவதியம்மன் கோயில் தெரு பத்ரகாளி 85. மூன்று மகன்கள் உள்ள நிலையில், மூன்றாவது மகன் மாரிமுத்து பராமரிப்பில் வசித்தார். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X