பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணி அவிட்ட நாளன்று

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கோவை:கோவில் மண்டபங்கள், விழா அரங்குகளில் நேற்று ஆவணி அவிட்டத்தை ஒட்டி, பூணுால் மாற்றும் வைபவம் விமரிசையாக நடந்தது.ஒருவனுக்கு வாழ்க்கை முறையை உபதேசிப்பது தான் உபநயனத்தின் நோக்கம். உபநயனம் என்பது ஞானமாகிய மூன்றாம் கண்ணை திறப்பதாகும். அப்போது அணிவிக்கப்படும் பூணுால் மிகப்புனிதமானது.வாமன ரூபம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கு, உபநயனத்தை சூரியபகவானே வந்து காயத்ரி மந்திரத்தை

கோவை:கோவில் மண்டபங்கள், விழா அரங்குகளில் நேற்று ஆவணி அவிட்டத்தை ஒட்டி, பூணுால் மாற்றும் வைபவம் விமரிசையாக நடந்தது.ஒருவனுக்கு வாழ்க்கை முறையை உபதேசிப்பது தான் உபநயனத்தின் நோக்கம். உபநயனம் என்பது ஞானமாகிய மூன்றாம் கண்ணை திறப்பதாகும். அப்போது அணிவிக்கப்படும் பூணுால் மிகப்புனிதமானது.வாமன ரூபம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கு, உபநயனத்தை சூரியபகவானே வந்து காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்து, விமரிசையாக நடத்தி வைத்தார்.அதனால் ஆண்டுதோறும், ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில், பூணுால் மாற்றும் வைபவம் நடைபெறும். ஆவணி அவிட்டமான நேற்று குறிப்பிட்ட சமுதாயங்களை சேர்ந்த பலர், வேத மந்திரங்கள் பாராயணம் செய்து, உபநயனம் செய்து கொண்டனர்.உபநிடதங்கள், வேதங்கள், ஆகமங்களை கற்றுத்தேர்ந்த பிராமணர்களின் வீடுகளிலும், அரங்குகளிலும் கோவில் மண்டபங்களிலும் நேற்று, ஆவணி அவிட்டத்தை ஒட்டி உபநயன நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.'பூணுால் அணிவதை சடங்காக கருதாமல், அதன் நியமங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்; அப்போதுதான் அதன் புனிதம் காக்கப்படும்' என்று, வித்வான்கள் மற்றும் வேத பண்டிதர்கள் பூணுால் அணிந்து கொண்டவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X