அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை தர வேண்டும்': சீமான்

Added : ஆக 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-'சிறப்பு முகாம்களின் கொடிய பிடியில் இருந்து, இலங்கை தமிழர்களை விடுவித்து, குடியுரிமை வழங்கி, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை, தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும்' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:திருச்சி சிறப்பு முகாமில் இருந்து, தங்களை விடுவிக்க வேண்டும் எனக்கோரி, பட்டினி போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேரில்,
 'இலங்கை தமிழர்களுக்கு  குடியுரிமை தர வேண்டும்': சீமான்

சென்னை-'சிறப்பு முகாம்களின் கொடிய பிடியில் இருந்து, இலங்கை தமிழர்களை விடுவித்து, குடியுரிமை வழங்கி, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை, தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும்' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:திருச்சி சிறப்பு முகாமில் இருந்து, தங்களை விடுவிக்க வேண்டும் எனக்கோரி, பட்டினி போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேரில், முகுந்தன், நிரூபன் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் செய்தி அறிந்து, பதைபதைத்து போனேன்.இலங்கை தமிழர் என்ற ஒரு காரணத்திற்காக, அவர்களை சந்தேக வளையத்திற்குள் வைத்து கண்காணித்து, அவர்களின் சுதந்திரத்தையும், தனி உரிமையையும் மறுத்து, மனித உரிமை மீறலை அரங்கேற்றி வருவது கண்டிக்கத்தக்கது.

குடியுரிமை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த தி.மு.க., அரசு, அதை நிறைவேற்றாமல், சிறப்பு முகாம்களின் கொடிய பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க மறுத்து, இரட்டை வேடமிடுவது வெட்கக்கேடானது.சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இயங்கி வரும், வதைக்கூடங்களை மூடி, இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அரசு ஏற்படுத்தி தர, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கௌடில்யன் - Chennai ,இந்தியா
24-ஆக-202106:24:49 IST Report Abuse
கௌடில்யன் ஆப்கனிஸ்தானில் தொப்புள் கோடி யாரும் இல்லியா ....அவுங்கள செல்வம் கொழிக்கும் அரபு நாடுகளே சீண்டாத போது இந்தியா அரவணைக்க வேண்டாமா ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X