பொது செய்தி

தமிழ்நாடு

ஏரிக்கரை பூங்காற்றே... தேடி வர தூது சொல்லு! கானூர் நீர்நிலை சீரமைத்தால், 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் சிறக்கும்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
அவிநாசி:பெரிய கானுார் ஏரி, அரசு அல்லது தன்னார்வலர்கள் மூலம், சீரமைக்கப்பட்டால், 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்; நிலத்தடி நீராதாரம் உயரும்.அவிநாசியின் மிகப்பெரிய நீர் நிலையாக, 150 ஏக்கர் பரப்பளவில், பெரிய கானுார் ஏரி விளங்குகிறது. ஆறு நீர் வழித்தடங்கள், இரண்டு ஓடைகளில் இருந்து, இந்த ஏரிக்கு தண்ணீர் வருகிறது.ஏரியில் நீர் நிரம்பினால் கானுார்,
 ஏரிக்கரை பூங்காற்றே... தேடி வர தூது சொல்லு! கானூர் நீர்நிலை சீரமைத்தால், 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் சிறக்கும்

அவிநாசி:பெரிய கானுார் ஏரி, அரசு அல்லது தன்னார்வலர்கள் மூலம், சீரமைக்கப்பட்டால், 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்; நிலத்தடி நீராதாரம் உயரும்.அவிநாசியின் மிகப்பெரிய நீர் நிலையாக, 150 ஏக்கர் பரப்பளவில், பெரிய கானுார் ஏரி விளங்குகிறது. ஆறு நீர் வழித்தடங்கள், இரண்டு ஓடைகளில் இருந்து, இந்த ஏரிக்கு தண்ணீர் வருகிறது.

ஏரியில் நீர் நிரம்பினால் கானுார், முறியாண்டம்பாளையம், சேவூர், நடுவச்சேரி உள்ளிட்ட, 5க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும்; 3,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய கிணறுகளுக்கு நீராதாரம் கிடைக்கும். 25 கி.மீ., வரை ஆழ்துளை கிணறுகளுக்கான நிலத்தடி நீராதாரமாகவும் இருக்கும்.இதுதான் சிறப்புஏரிக்கரையில் உள்ள மரங்களில், பருவ காலங்களில் வெளிநாட்டு பறவைகள் வலசை வருகின்றன.

அவிநாசி-- அத்திக்கடவு திட்டத்தில் இணைந்துள்ள பிரதான ஏரிகளில் ஒன்று. சாக்கடை கழிவுகளோ வேறு எந்தவொரு கழிவுநீரும் இந்த ஏரி நீரில் கலப்பதில்லை.குறையும் பொலிவுஏரியில், தண்ணீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்துள்ளன; ஏரி துார்வாரப்பட வேண்டும்; ஏரிக்கரை பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து, 'கானுார் ஏரி பாதுகாப்பு சங்கம்' ஏற்படுத்தப்பட்டு. அதில் இணைந்துள்ள தன்னார்வலர்கள், வாரந்தோறும் ஞாயிறன்று, ஏரியில் நிறைந்துள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேவை என்ன?
ஏரி பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் நாகராஜ், விஜயகுமார், கார்த்திகேயன் கூறுகையில், "ஏரியில் புதர்மண்டி கிடக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், தென்புறத்தில் உள்ள கிழமேற்கு ஏரியை பலப்படுத்துதல், மேற்புறம், தென்வடல் ஏரி அமைத்தல், புதர்மண்டி பலவீனமான நீர்வழித்தடங்களை அகலப்படுத்தி, துார் வாருதல், மழைநீரை நிலத்தடியில் சேமிக்கும் வகையில், ஏரிக்கரைகளை சுற்றி பனைமரம் மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் போன்ற பணிகளுக்கு, 45 லட்சம் ரூபாய் செலவாகும் என, மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.இத்தொகையை அரசோ, தன்னார்வ அமைப்பினரோ வழங்க முன்வந்தால்,ஏரி புதுப்பொலிவுபெறும்,” என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X