சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எச்.ஐ.வி., பரிசோதனை நிதியில் மருத்துவமனையில் முறைகேடு?

Added : ஆக 23, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள நுண்ணுயிர் பிரிவு நிர்வகிக்கும் எச்.ஐ.வி., ஆய்வகம் உள்ளது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், ஒருங்கிணைந்த கலந்தாய்வு மற்றும் பரிசோதனை ஆய்வகங்களில் எடுக்கப்படும் எச்.ஐ.வி., பரிசோதனை மாதிரிகள், மேற்கண்ட மருத்துவமனை ஆய்வகத்துக்கு அனுப்பி

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள நுண்ணுயிர் பிரிவு நிர்வகிக்கும் எச்.ஐ.வி., ஆய்வகம் உள்ளது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், ஒருங்கிணைந்த கலந்தாய்வு மற்றும் பரிசோதனை ஆய்வகங்களில் எடுக்கப்படும்

எச்.ஐ.வி., பரிசோதனை மாதிரிகள், மேற்கண்ட மருத்துவமனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆய்வகத்தைச் சேர்ந்த பணியாளர்கள், ரத்த மாதிரிகளை எடுத்து வரும் ஊழியர்களுக்கான பயணப்படி, பணிப்படி உள்ளிட்ட சலுகை கள், சில ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளன.மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடுச் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் இந்நிதியை, போலியாக ரசீது காண்பித்து, அந்த பணத்தை அதிகாரிகள் முறைகேடு செய்வதாக புகார் எழுந்துள்ளது.இதனால் பாதிக்கப்பட்டதிருவண்ணாமலை மாவட்ட ஆய்வக ஊழியர்கள், தமிழக சுகாதாரத் துறை செயலர், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆகியோருக்கு, புகார் அனுப்பி உள்ளனர்.

அதன் விபரம்:இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆய்வக ஊழியர்களுக்கு, ஆய்வக தர உத்தரவாத பயிற்சி அளிக்கப்படும்.இதில் பங்கேற்க வரும் ஊழியர்களுக்கு பயணப்படி, பணிப்படி, உணவு உள்ளிட்ட சலுகைகள், ஐந்தாண்டுகளாக வழங்கப்படவில்லை.கடந்த 2018- - 19ல், 75 ஆயிரம் ரூபாய்; 2018 - -19ல்,1.7 லட்சம் ரூபாய்; 2020 - 21ம் ஆண்டில், 1.25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு வழங்கப்படவில்லை.இதேபோல், ஆய்வகத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியும் முறையாக செலவழிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் நுண்ணுயிர் பிரிவு தலைவரிடம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X