பொது செய்தி

தமிழ்நாடு

இன்னும் எத்தனை காலம்தான்...!

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பல்லடம்:தொழில்ரீதியாக வளர்ச்சியடைந்து வரும் பல்லடம், பல்வேறு நகரங்களின் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது.தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், அவிநாசி, பொள்ளாச்சி, மதுரை, உடுமலை, கொச்சி செல்லும் மாநில நெடுஞ்சாலைகள், இங்கு இணைகின்றன. புறவழிச்சாலையால், பல் லடம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள், கன்டெய்னர்கள், மணல் லாரிகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட
 இன்னும் எத்தனை காலம்தான்...!

பல்லடம்:தொழில்ரீதியாக வளர்ச்சியடைந்து வரும் பல்லடம், பல்வேறு நகரங்களின் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது.தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், அவிநாசி, பொள்ளாச்சி, மதுரை, உடுமலை, கொச்சி செல்லும் மாநில நெடுஞ்சாலைகள், இங்கு இணைகின்றன. புறவழிச்சாலையால், பல் லடம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள், கன்டெய்னர்கள், மணல் லாரிகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் மாற்று வழி கிடைக்கும், தற்போதுள்ள என்.ெஹச்., ரோடு, 15 ஆண்டுக்கு முன் போடப்பட்டது. வாகனங்களின் எண்ணிக்கை அப்போது இருந்ததைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.ஆனால், ரோடு மட்டும் அதே நிலையில் உள்ளது. பல்லடம் பனப்பாளையம் முதல் காரணம்பேட்டை வரை உள்ள என்.ெஹச்., ரோட்டை கடந்து சென்றுவிட்டால், பின் விபத்தில் இருந்து தப்பித்து விடலாம் என்ற சூழல் உள்ளது. அந்த அளவுக்கு விபத்துகள், உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.380 பேர் பலிபல்லடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த, 1,662 வாகன விபத்துகளில், 380 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக, 2018ம் ஆண்டு, 92 உயிரிழப்புகளும், 2017ல், 374 வாகன விபத்துகளும் நடந்துள்ளன. சராசரியாக ஒரு மாதத்தில் நடக்கும், 30 சாலை விபத்துகளில், 5 முதல் 8 பேர் வரை பலியாகின்றனர்.வாகன விபத்துகளால் குடும்ப உறுப்பினர்களை இழந்தும், உடல் உறுப்புகளை இழந்தவர்களாலும் பல்வேறு குடும்பங்கள் இன்று வரை பரிதவித்து வருகின்றன. மேலும் இதுபோன்ற விபத்துகள், பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்பதே பல்லடம் மக்களின் நீண்டகால கோரிக்கை.போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டி அறிவிக்கப்பட்ட கோவை- - கரூர் புறவழிச்சாலை திட்டம் பல ஆண்டாக செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. அதேபோல், ரிங் ரோடு பணியும் பாதியிலேயே கைவிடப்பட்டது. ஆண்டு தோறும் உயிரிழப்புகள் அதிகரித்து வந்தபோதும், அதற்கான தடுப்பு நடவடிக்கை என்பது வெறும் பேச்சு பொருளாக மட் டுமே இருந்து வருகிறது.அமைச்சர் செவிசாய்ப்பாரா?மூன்று முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் பல்லடத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க., அரசு, அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் வினீத் ஆகியோர் பல்லடத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் ஆலோசித்து, பல்லடம் பனப்பாளையம் முதல் அண்ணா நகர் வரை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X