பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் வரும் 29ல் இலவச கண் மருத்துவ முகாம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், வரும், 29ம் தேதி, இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து காஞ்சிபுரத்தை சேர்ந்த கண் சிகிச்சை முகாம் ஏற்பாட்டாளர் எஸ்.ஆனந்தகுமார் கூறியதாவது:காஞ்சிபுரம், ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், பெரிய காஞ்சிபுரம் குஜராத்தி திருமண மண்டபத்தில், வரும், 29ல்,

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், வரும், 29ம் தேதி, இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து காஞ்சிபுரத்தை சேர்ந்த கண் சிகிச்சை முகாம் ஏற்பாட்டாளர் எஸ்.ஆனந்தகுமார் கூறியதாவது:காஞ்சிபுரம், ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், பெரிய காஞ்சிபுரம் குஜராத்தி திருமண மண்டபத்தில், வரும், 29ல், காலை, 10:00 மணிக்கு, இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., எழிலரசன் முகாமை துவக்கி வைக்கிறார். இதில், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.கண்புரை நோய் உள்ளவர்கள் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு, சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முற்றிலும் இலவசமாக, விழிலென்ஸ் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.முகாமில் பங்கேற்க விரும்புவோர், 97914 08768, 97516 11431 ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X