சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபருக்கு வெட்டு: மூன்று பேர் கைது

Added : ஆக 23, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : உத்திரமேரூர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அஜீத்குமார், 24. இவர் மீது, 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.அதே பகுதியை சேர்ந்த ராமன், 33, இவர் மீதும், நான்கு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகில் அஜீத்குமார் அமர்ந்திருந்தார்.அப்போது,

உத்திரமேரூர் : உத்திரமேரூர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அஜீத்குமார், 24. இவர் மீது, 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.அதே பகுதியை சேர்ந்த ராமன், 33, இவர் மீதும், நான்கு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகில் அஜீத்குமார் அமர்ந்திருந்தார்.அப்போது, அங்கு வந்த ராமன், அஜீத்குமாரின் தலை, முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதியில் கத்தியால் வெட்டியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த அஜீத்குமாரை, உத்திரமேரூர் போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து, அஜீத்குமார் தாய் முனியம்மாள் அளித்த புகாரையடுத்து, ராமன், 33; அவரது மனைவி சுமதி, 24; தாய் சந்திரா, 70; ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த உத்திரமேரூர் போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X