பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவேடல் தாங்கல் பகுதியில் 800 பனை விதைகள் நடவு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர், சிறுவேடல் தாங்கல் பகுதியில், நேற்று, 800 பனை விதைகள் நடவு செய்தனர்.காஞ்சிபுரத்தை சேர்ந்த மகிழம் குழுமம், 'செலிப்ரேட்' காஞ்சி ஆகிய தன்னார்வ அமைப்பினர், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிக்கரைகளில், ஆண்டு தோறும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக்கு முன், பனை விதைகளை நடவு செய்து
 சிறுவேடல் தாங்கல் பகுதியில் 800 பனை விதைகள் நடவு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர், சிறுவேடல் தாங்கல் பகுதியில், நேற்று, 800 பனை விதைகள் நடவு செய்தனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த மகிழம் குழுமம், 'செலிப்ரேட்' காஞ்சி ஆகிய தன்னார்வ அமைப்பினர், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிக்கரைகளில், ஆண்டு தோறும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக்கு முன், பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர்.அதன்படி, கடந்த ஆண்டு, 12,600 பனை விதைகள் நடவு செய்தனர். நடப்பாண்டு, 15 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, முதற்கட்டமாக, காஞ்சிபுரம் அடுத்த, சிறுவேடல் தாங்கல் பகுதியில், நேற்று, 800 பனை விதைகள் நடவு செய்துஉள்ளனர்.வாரந்தோறும் ஞாயிறன்றும், அரசு விடுமுறை நாட்களிலும், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஏரிக்கரைகளில், பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற உள்ளது.இதில், பங்கேற்க விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் 95665 36258 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மகிழம் குழுமம் ஒருங்கிணைப்பாளர் பரணிகுமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X