பொது செய்தி

இந்தியா

நீண்ட இடைவெளிக்கு பின் மூணாறில் களை கட்டிய சுற்றுலா

Added : ஆக 23, 2021
Share
Advertisement
மூணாறு,--கேரளா மூணாறில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பயணிகள் குவிந்ததால் சுற்றுலா பகுதிகள் களை கட்டின.கொரோனா 2ம் அலையால் கேரளாவில் ஏப்ரல் 27ல் சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டன. தற்போது நோய் பரவல் கட்டுக்குள் இல்லாவிட்டாலும் சுற்றுலா பகுதிகள் ஆக.8 முதல் திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.ஓணம் பண்டிகையான நேற்று முன்தினம் வரை பயணிகள் வருகை
 நீண்ட இடைவெளிக்கு பின்  மூணாறில் களை கட்டிய சுற்றுலா

மூணாறு,--கேரளா மூணாறில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பயணிகள் குவிந்ததால் சுற்றுலா பகுதிகள் களை கட்டின.கொரோனா 2ம் அலையால் கேரளாவில் ஏப்ரல் 27ல் சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டன.

தற்போது நோய் பரவல் கட்டுக்குள் இல்லாவிட்டாலும் சுற்றுலா பகுதிகள் ஆக.8 முதல் திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.ஓணம் பண்டிகையான நேற்று முன்தினம் வரை பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. நேற்று சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் படை எடுத்தனர். மூணாறில் மாட்டுபட்டி அணை, எக்கோ பாய்ண்ட், குண்டளை அணை, ராஜமலை உள்பட அனைத்து சுற்றுலா பகுதிகளும் களை கட்டின. மாட்டுபட்டியில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.அச்சம்கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சமீபத்தில் தெரியவந்தது. எனவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X