சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காஞ்சி அருகே வாலிபர் படுகொலை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, விப்பேடு பகுதியை சேர்ந்த வாலிபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் அடுத்த, விப்பேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பிரேம்குமார், 25. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில், வாலிபால் போட்டி நடந்துள்ளது.அங்கு, பிரோம்குமாருக்கும், சிலருக்கும் தகராறு நடந்துள்ளது. பின், வீட்டுக்கு சென்று சாப்பிட்ட பின், அவர் மனைவி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, விப்பேடு பகுதியை சேர்ந்த வாலிபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் அடுத்த, விப்பேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பிரேம்குமார், 25. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில், வாலிபால் போட்டி நடந்துள்ளது.அங்கு, பிரோம்குமாருக்கும், சிலருக்கும் தகராறு நடந்துள்ளது. பின், வீட்டுக்கு சென்று சாப்பிட்ட பின், அவர் மனைவி சினேகாவிடம், வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்பி வீட்டுக்கு செல்லவில்லை.

நேற்று காலை, அந்த ஊர் மாரியம்மன் கோவில் தெருவில், உடலில் பல இடங்களில் வெட்டு காயங்களுடன் அவர் இறந்த நிலையில் இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது உடலில் கை, கால், கழுத்து, மார்பு என, பல இடங்களில் வெட்டு காயம் இருப்பது தெரிய வந்தது.உடலை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இவர் கடந்த ஆண்டு, மாற்று சமூக பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன், அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார்.மேலும், பிரேம்குமார் மீது, கொலை முயற்சி, மணல் கடத்தல், அடிதடி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், அந்த கோணங்களிலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X