ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.935 கோடி மோசடி

Added : ஆக 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி,-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.935 கோடி முறைகேடு நடந்திருப்பது தணிக்கையில் தெரியவந்துள்ளது.இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அதன்படி 2017--18 நிதியாண்டில் ரூ.55,659 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக ஆண்டுதோறும் நிதி அதிகரிக்கப்பட்டு வருகிறது.

புதுடில்லி,-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.935 கோடி முறைகேடு நடந்திருப்பது தணிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அதன்படி 2017--18 நிதியாண்டில் ரூ.55,659 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக ஆண்டுதோறும் நிதி அதிகரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ரூ.1,11,405 கோடியும் ஒதுக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.935 கோடி மோசடி நடந்திருப்பது ஊரக மேம்பாட்டு அமைச்சக கணக்கு தணிக்கை பிரிவினரின் தணிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.245 கோடி முறைகேடு நடந்துள்ளது.மேலும் ரூ.935 கோடி மோசடியில் ரூ.12.5 கோடி மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது. இது வெறும் 1.34 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
23-ஆக-202108:12:57 IST Report Abuse
R.RAMACHANDRAN மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலையே செய்யாமல் வேலை செய்த்தாக பொய்யான காட்சிகள் காட்டி ஆண்டு தோறும் பலா ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதனை ஆறிந்திருந்தும் யாரும் கண்டுகொள்வது இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X