சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பஞ்சாயத்துக்கா இவ்வளவு பில்டப்? 'எல்லாரும் இவரை அடுத்த பிரதமர் என கூறுகின்றனர். அவரோ, தகராறுகளை தீர்த்து வைக்கும் தலைவராக உருவெடுத்து வருகிறார்' என, காங்., பொதுச் செயலர் பிரியங்காவை கிண்டலடிக்கின்றனர் பா.ஜ.,வினர். பிரியங்கா அரசியலில் அடி எடுத்து வைத்தபோது, 'இந்திராவின் மறு உருவம். எதிர்கால பிரதமர்' என, அவரது ஆதரவாளர்கள், 'பில்டப்' கொடுத்தனர். அவரோ, உத்தர பிரதேச
 அக்கம் பக்கம்

பஞ்சாயத்துக்கா இவ்வளவு பில்டப்?
'எல்லாரும் இவரை அடுத்த பிரதமர் என கூறுகின்றனர். அவரோ, தகராறுகளை தீர்த்து வைக்கும் தலைவராக உருவெடுத்து வருகிறார்' என, காங்., பொதுச் செயலர் பிரியங்காவை கிண்டலடிக்கின்றனர் பா.ஜ.,வினர். பிரியங்கா அரசியலில் அடி எடுத்து வைத்தபோது, 'இந்திராவின் மறு உருவம். எதிர்கால பிரதமர்' என, அவரது ஆதரவாளர்கள், 'பில்டப்' கொடுத்தனர். அவரோ, உத்தர பிரதேச மாநிலத்துக்கான பொறுப்பாளர் பதவியை மட்டும் ஏற்று, குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டி வந்தார்.

உ.பி.,யில் நடந்த லோக்சபா தேர்தலிலும், காங்கிரசை அவரால் வெற்றி பெற வைக்க முடிய வில்லை. அமேதி தொகுதியில் ராகுலே, மண்ணை கவ்வ வேண்டியிருந்தது. இதனால் பிரியங்கா மீது வைக்கப்பட்டிருந்த எதிர்பார்ப்பு நொறுங்கியது. இப்போது உட்கட்சிக்குள் நடக்கும் பூசல்களை தீர்த்து வைக்கும் பொறுப்பு பிரியங்காவுக்கு தரப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் சச்சின் பைலட், பஞ்சாபில் சித்து, ஹரியானாவில் தீபேந்தர் சிங் ஹூடா ஆகியோர், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவர்களை சமாதானப்படுத்தி பஞ்சாயத்து செய்யும் பணியை பிரியங்கா சத்தமில்லாமல் செய்து வருகிறார். 'காங்., கட்சியில் அஹமது படேல் ஏற்கனவே இந்த வேலையைச் செய்து வந்தார். இப்போது அதை பிரியங்கா செய்கிறார். பிரதமர் பதவிக்கெல்லாம் நம்மால் போட்டியிட முடியாது என அவருக்கு தெரிந்து விட்டது போலிருக்கிறது' என்கின்றனர் டில்லி அரசியல்வாதிகள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X