மழை நீர் கால்வாயில் மனித கழிவு குன்றத்துாரில் நடக்குது அட்டூழியம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
குன்றத்துார் : குன்றத்துாரில், கட்டண கழிப்பறையில் இருந்து வெளியேறும் மனிதக் கழிவு, மழை நீர் கால்வாயில் கலக்கும் அட்டூழியம் அரங்கேறி வருகிறது.குன்றத்துாரில் பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டியுள்ள குன்றத்துார் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில், கட்டண கழிப்பறை பயன்பாட்டில் உள்ளது. ஏராளமானோர் இதை பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் மனிதக் கழிவை,

குன்றத்துார் : குன்றத்துாரில், கட்டண கழிப்பறையில் இருந்து வெளியேறும் மனிதக் கழிவு, மழை நீர் கால்வாயில் கலக்கும் அட்டூழியம் அரங்கேறி வருகிறது.

குன்றத்துாரில் பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டியுள்ள குன்றத்துார் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில், கட்டண கழிப்பறை பயன்பாட்டில் உள்ளது. ஏராளமானோர் இதை பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் மனிதக் கழிவை, 'செப்டிக் டேங்க்'குகளில் விட்டு, அது நிரம்பியவுடன் முறைப்படி அகற்றுவது தான் வழக்கம்.ஆனால் அப்படிச் செய்யாமல், மனிதக் கழிவை நேரடியாக மழை நீர் கால்வாயில் விடுகின்றனர்.

இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழை நீர் கால்வாயில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைவதுடன், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்தும் அதிகரித்துள்ளது.மற்றொரு புறம் துர்நாற்றமும், கொசுத் தொல்லையும் பன்மடங்கு அதிகரித்து விட்டது.இதை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய பேரூராட்சி அதிகாரிகள், எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

இது போன்று அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளால் தான், பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.எனவே, இனியாவது மழை நீர் கால்வாயில் மனிதக் கழிவு கலப்பதை தடுத்து, மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X