சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாத்திரையால் மகனுக்கு 'அலர்ஜி' டாக்டர் மீது தாய் போலீசில் புகார்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
திரு.வி.க.நகர் : மாத்திரையால் சிறுவனுக்கு 'அலர்ஜி' உண்டானதாக, டாக்டர் மீது பெண் புகார் அளித்துள்ளார்.மாதவரம், சீனிவாச பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஷியாமலி, 32. இவர், நேற்று முன்தினம் இரவு, திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு:என் மகனுக்கு மே 28ம் தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டது.திரு.வி.க.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு, டாக்டர்

திரு.வி.க.நகர் : மாத்திரையால் சிறுவனுக்கு 'அலர்ஜி' உண்டானதாக, டாக்டர் மீது பெண் புகார் அளித்துள்ளார்.

மாதவரம், சீனிவாச பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஷியாமலி, 32. இவர், நேற்று முன்தினம் இரவு, திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு:என் மகனுக்கு மே 28ம் தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டது.திரு.வி.க.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு, டாக்டர் முத்தரசு பரிந்துரையின்படி, மாத்திரைகள் கொடுத்தேன். ஆனால், அவனுக்கு மருந்தால் 'அலர்ஜி' ஏற்பட்டது.

மீண்டும் அவர் அளித்த மாத்திரைகள் மற்றும் ஊசியால், என் மகனுக்கு உடல் முழுதும் சிவப்பு கொப்பளங்கள் உண்டாகின.தற்போது, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகனை சேர்த்துள்ளேன். மகனின் இந்த நிலைக்கு காரணமான மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X